தோசை வேற லெவல்.. ஆனந்த் மஹிந்திரா போட்ட டிவீட்.. வீடியோ வைரல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனந்த் மஹிந்திரா இன்று இளம் தலைமுறையினரால் தினமும் கவனிக்கப்பட்டு வரும் மிகவும் முக்கியமான தொழிலதிபர். ஆட்டோமொபைல், ஐடி எனப் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, என்ன தான் வேலையில் பிசியாக இருந்தாலும் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு மனிதர்.

 

இவருடைய டிவிட்டர் அக்கவுண்ட் பல முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோ மற்றும் பதிவுகளுக்கு ஒரு தங்க சுரங்கம் போன்றது.

இப்படிச் சமீபத்தில் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓலாவின் புதிய நிறுவனம்.. பாவிஷ் அகர்வால்-வின் பிரம்மாண்ட வளர்ச்சி..!

ஷாட் வீடியோ கலாச்சாரம்

ஷாட் வீடியோ கலாச்சாரம்

இன்று சமுக வலைத்தளத்திலும், ஷாட் வீடியோ கலாச்சாரத்தில் உணவு வீடியோக்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. இதிலும் குறிப்பாகக் கிராமத்து சமையல் மற்றும் சாலையோர உணவு வீடியோக்களுக்கு மிகப்பெரிய பாலோவர் கூட்டம் உள்ளது.

சமையல் வீடியோ

சமையல் வீடியோ

அதேபோல் சமையல் வீடியோக்கள் அதிகம் பார்ப்பது பெண்கள் தான் என்ற கருத்தை இந்த ஷாட் வீடியோ கலாச்சாரம் உடைத்த நிலையில் ஆனந்த் மஹிந்திரா போன்ற பெரும் தொழிலதிபர்களும் உணவு வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்பது அவரது ட்வீ ட் மூலம் தெரிகிறது.

ஆனந்த் மஹிந்திரா டிவீட்
 

ஆனந்த் மஹிந்திரா டிவீட்

சமீபத்தில் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சாலையோர கடைக்காரர் தோசையை ராக்கெட் வேகத்தில் பிளேட்டில் கொடுத்து வந்த வீடியோவை பதிவிட்டார். இந்த வீடியோவும் வழக்கம் போல் வைரலானது. இதுவரை ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட வீடியோவை சுமார் 24 லட்சம் போர் பார்த்து உள்ளனர். 24,700 பேர் விரும்பியுள்ளனர், 2,100 பேர் ரீட்வீ ட் செய்துள்ளனர்.

ரோபோ எல்லாம் வேஸ்ட்

இந்த வீடியோ-வை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா, ட்வீ ட்டில் இவரின் வேகத்தைப் பார்க்கும் போது ரோபோ எல்லாம் செயல்திறனற்ற இயந்திரம் எனத் தோன்றுகிறது. இவர் செய்வதைப் பார்க்கும் போதே நான் சோர்வு அடைகிறேன், பசியும் கூட எடுக்கிறது என ஆனந்த் மஹிந்திரா ட்வீ ட் செய்துள்ளார்.

செம தோசை மாஸ்டர்

செம தோசை மாஸ்டர்

இந்த ட்வீ ட்டுக்குப் பதில் அளித்துள்ள பலர் இந்தத் தோசை பிளாட்-ஐ பிடிப்பவர் மிகவும் சிறப்பாகவும், ஒரு நொடியை கூட வீணாக்காமல் பிடிக்கிறார் என்றும் பதில் அளித்துள்ளனர். அதற்கு ஆனந்த் மஹிந்திரா இந்திய கிரிக்கெட் அணிக்கான விக்கெட் கீப்பர் பதவிக்குத் தகுதியானவரா என்பது போல் பதில் அளித்துள்ளார்.

மக்கள் பதில்

மக்கள் பதில்

இதேபோல் மேலும் சிலர் இந்தத் தோசை கடையும், தோசை கடைக்காரர்-ம் தரார் கிழக்கு மார்கெட் பகுதியில் இருப்பதாகவும் பதில் அளித்துள்ளனர். இதோடு இந்த வீடியோவை இரவில் பார்த்தவர்களுக்கு பிசி எடுக்கத் துவங்கியுள்ளதாகவும் பதில் அளித்துள்ளனர்.

அட திருட்டு பறவையே

இதைத் தொடர்ந்து சில மணிநேரத்திற்கு முன்பு ஒரு பறவை ஒரு சூப்பர் மார்கெட்-ல் ஆட்டோமேட்டிங் டோர் திறந்து மூடுவதற்குள் எப்படி லாவகமாகச் சென்று தின்பண்டத்தைத் திருடிக் கொண்டு வருகிறது என்பதை வியந்து ட்வீ ட் செய்துள்ளார்.

மஹிந்திரா XUV 700 எஸ்யூவி கார்

மஹிந்திரா XUV 700 எஸ்யூவி கார்

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள மஹிந்திரா XUV 700 எஸ்யூவி கார் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசைன், நிறம், சேவை என அனைத்துமே சந்தையில் இருக்கும் சக போட்டி நிறுவன தயாரிப்புகளை விடவும் சிறப்பாக உள்ளது. இதேபோல் விலையும் எஸ்யூவி பிரிவில் பல முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை உருவாக்கும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra shares 2 interesting videos on Twitter: 'dosa' man and shoplifting bird

Anand Mahindra shares 2 interesting videos on Twitter: 'dosa' man and shoplifting bird
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X