இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒரு காலத்தில் முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிவிட்டு முந்தி ஓடிய அவருடைய சகோதரர் அடுத்தது தோல்விகளையும், சரிவுகளையும் எதிர்கொண்டு வரும் காரணத்தால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
ஒருபக்கம் அனில் அம்பானி தலைமை வகிக்கும் அனைத்து வர்த்தகமும் மோசமான நிலையை அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் அனில் அம்பானி நிறுவனத்திற்காக வாங்கிய கடனை கூடத் திருப்பிச் செலுத்த முடியாமல் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
இந்தக் கடுமையான சூழ்நிலையில் செபியின் புதிய உத்தரவு அனில் அம்பானிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ்-ல் பிரஷ்ஷர்களுக்கு 7.3 லட்சம் ரூபாய் சம்பளம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்
பங்குச்சந்தை சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL), அதன் உரிமையாளர் அனில் அம்பானி மற்றும் மூன்று நபர்கள் நிதி மோசடி செய்ததாகக் கூறி, பங்குச் சந்தையைச் சார்ந்த எவ்விதமான நடவடிக்கையிலும் ஈடுப்பட கூடாது எனத் தடை விதித்துள்ளது.

செபி தடை
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து முறையற்ற வகையில் பணத்தை வெளியேற்றியுள்ளதாகக் கூறி செபி அனில் அம்பானி மற்றும் இந்நிறுவனத்தின் 3 உறுப்பினர்களான அமித் பாப்னா, பிங்கேஷ் ஆர் ஷா மற்றும் ரவீந்திர சுதால்கர் ஆகியோர் மீது செபி தடை விதித்துள்ளது.

இடைக்கால உத்தரவு
செபி அமைப்பின் இந்த இடைக்கால உத்தரவின் படி மேலே குறிப்பிட்டு உள்ள 4 நபர்களும் "செபியில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும், பட்டியலிடப்பட்ட எந்தவொரு பொது நிறுவனம் அல்லது பொது நிறுவனங்களின் செயல் இயக்குநர்கள் / ப்ரோமோட்டர் ஆகப் பணியாற்றுவதிலும், பொதுமக்களிடம் இருந்து பணத்தைத் திரட்ட உத்தேசித்துள்ள நிறுவனங்களின் அடுத்த உத்தரவு வரும் வரை பணியாற்றத் தடை விதித்துள்ளது.

கடனை முறைகேடு
2018-19ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் அளித்த பல்வேறு கடன்களில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதைச் செபி விசாரித்து வருவதாகும் தெரிவித்து இந்தத் தடை உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.