அனில் அம்பானி மறைத்த 1.3 பில்லியன் டாலர் வெளிநாட்டுச் சொத்துக்கள்.. வெளிச்சத்திற்கு வந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப்-ன் வர்த்தகம், வருமானம் ஆகிய அனைத்தும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் கடன் சுமை கழுத்தை நெரிக்கும் அளவிற்கு உயர்ந்தது.

 

இந்த நிலையில் தான் அனில் அம்பானி பண்டோரா பேப்பரஸ் தரவுகளில் சிக்கியுள்ளார்.

ரூ.6 லட்சம் கோடி.. நினைத்திடாத உயரத்தை தொட்ட யூபிஐ..!

அனில் அம்பானி

அனில் அம்பானி

அனில் அம்பானி கடன் பாக்கி வைத்துள்ள 3 சீன அரசு வங்கிகள் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக முயற்சி செய்த நிலையில் தோற்றுப்போனது. இதற்காக 3 சீன அரசு வங்கிகளும் லண்டனில் அனில் அம்பானிக்கு எதிராக வழக்குத் தொடுத்தது.

ஜீரோ மதிப்பு

ஜீரோ மதிப்பு

இந்த வழக்கின் விசாரணையில் அனில் அம்பானி தன்னிடம் எவ்விதமான சொத்துக்களும் இல்லை என்றும் தன் மொத்த சொத்து மதிப்பு ஜீரோ என அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கு நீதிமன்றம் இந்தியாவில் சொத்துக்கள் இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை விற்று 716 மில்லியன் டாலரை செலுத்த உத்தரவிட்டது.

பண்டோரா பேப்பர்ஸ்
 

பண்டோரா பேப்பர்ஸ்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அனில் அம்பானி உலகில் எங்குமே தனது சொத்துக்கள் இல்லை என அடித்துக் கூறினார், இதனால் இவ்வழக்கு இன்னும் விசாரணையிலேயே வைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இன்று இந்தியாவையே புரட்டிப்போட்டு உள்ள பண்டோரா பேப்பர்ஸ் தரவுகளில் அனில் அம்பானி வசமாக மாட்டிக்கொண்டு உள்ளார்.

ரிலையன்ஸ் ADA குரூப்

ரிலையன்ஸ் ADA குரூப்

இன்று வெளியாகியுள்ள பண்டோரா பேப்பர்ஸ் தரவுகளில் ரிலையன்ஸ் ADA குரூப் தலைவர் அனில் அம்பானி மற்றும் இந்நிறுவனத்திற்கு தொடர்புடையவர்கள் சுமார் 18 வெளிநாட்டு நிறுவனங்களை ரகசியமாக ஜெர்சி, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்டு, சைப்ரஸ் ஆகிய நாடுகளில் வைத்துள்ளனர்.

1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

2007 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் இந்த 18 நிறுவனத்தில் 7 நிறுவனங்கள் சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவிலான கடன் பெற்று முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் அனில் அம்பானிக்குச் சொந்தமாகச் சுமார் 1.3பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

அனில் அம்பானி பெயரில் 3 நிறுவனம்

அனில் அம்பானி பெயரில் 3 நிறுவனம்

ஜெர்ஜி பகுதியில் மட்டும் அனில் அம்பானி பெயரிலேயே 3 நிறுவனங்கள் உள்ளது Batiste Unlimited, Radium Unlimited, Hui Investment Unlimited. இதில் Batiste Unlimited, Radium Unlimited ஆகிய இரு நிறுவனங்கள் ரிலையன்ஸ் இன்னோவென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் உள்ளது. ரிலையன்ஸ் இன்னோவென்சர்ஸ் தான் ரிலையன்ஸ் ADA குரூப்-ன் டாப் ஹோல்டிங் நிறுவனம்.

ரிலையன்ஸ் கேபிடல்

ரிலையன்ஸ் கேபிடல்

மேலும் Hui Investment Unlimited என்ற நிறுவனம் AAA எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ளது. இது தான் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமாகும். இதேபோல் Summerhill Ltd, Dulwich Ltd ஆகிய இரு நிறுவனங்கள் அனுப் தலால் பெயரில் உள்ளது.

அனுப் தலால்

அனுப் தலால்

அனுப் தலால் பெயரில் பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்டு-ல் பல நிறுவனங்கள் உள்ளது. இப்படி 3 நாடுகளில் 18 நிறுவனங்களை அனில் அம்பானி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் வைத்துள்ளதாகப் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

ஜெர்ஜி

ஜெர்ஜி

Batiste Unlimited

Radium Unlimited

Hui Investment Unlimited

Summerhill Ltd

Dulwich Ltd

Laurence Mutual

Richard Equity Ltd

German Equity Ltd

பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட்ஸ்

பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட்ஸ்

Reindeer Holdings Ltd

Northern Atlantic Consultancy Services Group Unlimited

Northern Atlantic Trading Unlimited

Northern Atlantic Investment Unlimited

Trans Pacific Holdings Pvt Ltd

Trans Atlantic Holdings Pvt Ltd

Trans America Holdings Pvt Ltd

சைப்ரஸ்

சைப்ரஸ்

AAA Enterprises And Ventures Pvt Ltd

AAA Telecom Holgings Pvt Ltd

AAA Infrastructure Investments Pvt Ltd

இந்த 18 நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் நிறுவனங்களிலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார் அனில் அம்பானி. இந்த நிலையில் சீன வங்கிகள் இனி என்ன செய்யும்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani hides $1.3-billion assets in 18 offshore firms : Pandora Papers

Anil Ambani hides $1.3-billion assets in 18 offshore firms : Pandora Papers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X