வழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் அனில் அம்பானி, முன்னதாக தனது பல சொத்துகளை விற்று கடனை கட்டி வந்தார்.

 

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, தனது மனைவியின் நகைகளையே விற்று செலவழிக்கிறேன், தனது செலவுகளையும் குடும்பத்தினர் தான் பார்த்துக் கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டில் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் சீனாவின் மூன்று வங்கிகளிடம் 700 மில்லியன் டாலர் கடன் வாங்கியிருந்தார்.

காஸ்ட்லி போன் மீது மக்கள் மோகம்.. கொரோனா-வால் ஏற்பட்ட மாற்றம்..!

அனில் அமாப்னி மீது வழக்கு

அனில் அமாப்னி மீது வழக்கு

இந்த கடனை அவர் செலுத்தத் தவறியதால் அவருக்கு கடன் வழங்கிய, இண்டஸ்ட்ரியல் & கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா, சீனா டெவலமெண்ட் பேங்க் மற்றும் எக்ஸிம் பேங்க் ஆப் சீனா உள்ளிட்ட வங்கிகள் அனில் அம்பானி மீது வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் லண்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அனில் அம்பானி உத்தரவாதத்தினை மதிக்கும் படி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

$717 மில்லியன் செலுத்த தீர்ப்பு

$717 மில்லியன் செலுத்த தீர்ப்பு

அத்துடன் அனில் அம்பானிக்கு ஜூன் 12, 2020க்கு மூன்று சீன வங்கிகளுக்கும், சட்ட செலவுகள் உட்பட 717 மில்லியன் டாலர் செலுத்த உத்தரவிட்டனர். இந்த நிலையில் நிலுவையைத் செலுத்தாதால், வங்கிகள் அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க அனுமதிக்க வேண்டின. இதற்கிடையில் தான் நீதிமன்றம் அனில் அம்பானியின் சொத்து விவரங்களை ஜூன் 29 அன்று தாக்கல் நிதிமன்றம் உத்தரவிட்டது.

நகைகளை விற்று தான் செலவு செய்கிறேன்
 

நகைகளை விற்று தான் செலவு செய்கிறேன்

இப்படி நெருக்கடியான நிலையில் தான் செப்டம்பர் 25 அன்று குறுக்கு விசாரணைக்கு வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் அனில் அம்பானி ஆஜரானார். அந்த விசாரணையின் போது கடன் பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு இந்த சட்ட செலவுகளுக்கு கூட மனைவியின் நகைகளை விற்று, அதன் மூலம் செலவு செய்வதாகவும், தனது செலவுகள் அனைத்தையும் தனது குடும்பத்தினரே பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கிட்டதட்ட ரூ.10 கோடிக்கு நகை விற்பனை

கிட்டதட்ட ரூ.10 கோடிக்கு நகை விற்பனை

மேலும் கடந்த ஜனவரி - ஜூன் 2020 வரையில் 9.9 கோடி ரூபாய்க்கு நகைகளை மூலம் தொகையினை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு தன்னிடம் தற்போர்து எதுவும் இல்லை. அதோடு தனது வங்கி இருப்பு கடந்த டிசம்பர் 2019ல் 40.2 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், ஜனவரி 2020ல் வெறும் 20.8 லட்சமாக குறைந்ததாகவும் கூறியுள்ளார்.

அனில் அம்பானி மீது நடவடிக்கை

அனில் அம்பானி மீது நடவடிக்கை

எனினும் இதற்கிடையில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், அனில் அம்பானி மீதான நடவடிக்கைகள் தொடரும் என்று மூன்று சீன வங்கிகளும் தெரிவித்துள்ளன. அதோடு தங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவையை தொகையை மீட்க சட்ட வழிகள் ஆராயப்படும் என்றும் கூறியுள்ளனர். கிட்டதட்ட அனில் அம்பானியிடம் மூன்று மணி நேரம் நடந்த விசாரணையில், அனில் அம்பானியின் சொத்து விவரங்கள் அனைத்தும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அம்பானி ஆடம்பர செலவு செய்கிறார்

அம்பானி ஆடம்பர செலவு செய்கிறார்

இதற்கிடையில் வங்கி தரப்பில் அனில் அம்பானி தனது கிரெடிட் கார்டு அட்டையை பயன்படுத்தி, அவர் ஷாப்பிங் செய்த அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் தான் எதுவும் ஷாப்பிங் செய்யவில்லை. ஷாப்பிங் செய்தது தனது தாயார் எனவும் அனில் அம்பானி அதனை மறுத்துள்ளார்.

ஒரு காரை தான் பயன்படுத்துகிறேன்

ஒரு காரை தான் பயன்படுத்துகிறேன்

ஆனால் வங்கிகளோ அவர் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கின்றார். சொகுசு கார்களை பற்றி அம்பானியிடம் கேட்டபோது, நான் ஒரு போதும் ரோல்ஸ் ராய்ஸை சொந்தமாக்கவில்லை. தற்போது நான் ஒரு காரைப் பயன்படுத்துகிறேன். எனது செலவுகளை முழுக்க எனது குடும்பமே ஏற்கிறது. நான் ஒரு பகட்டான வாழ்க்கையை வாழவில்லை என்றும் அனில் அம்பானி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil ambani said have just 1 car, sold jewellery to pay legal fees to UK court

Anil ambani said have just 1 car, sold jewellery to pay legal fees to UK court.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X