கொரோனாவுக்கு மத்தியில் ஐடி துறையில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஊழியர்கள் பணிபுரியும் கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் வந்துள்ளன.
குறிப்பாக வீட்டில் இருந்து பணிபுரிந்தும், அலுவலகத்தில் இருந்தும் பணிபுரியும் கலப்பின கலாச்சாரம் பரவி வருகின்றது.
எப்படியிருப்பினும் பற்பல நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை திரும்ப அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றன. குறிப்பாக ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் படிப்படியாக ஊழியர்காளை அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்து வருகிண்றன.
கிரிப்டோகரன்சி: கருப்புப் பணத்தை மறைக்க ஈசியான வழியா.. அரசியல்வாதிகளை ஐடி கண்காணிப்பது ஏன்..?

காலக்கெடு நீக்கம்
சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவகத்திற்கு வரவேண்டாம் என காலக்கெடுவையும் விதித்துள்ளன. அந்த வகையில் காலக்கெடு விதித்திருந்த முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள், அதன் ஊழியர்களுக்கு விதித்திருந்த காலக்கெடுவினை நீக்கியுள்ளது.

கொரோனா அச்சம்
தற்போது ஓமிக்ரான் பரவல் என்பது மீண்டும் பற்பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தான் டெக் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் முன்னதாக பிப்ரவரி 1 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தீர்மானிக்கப்படாத தேதியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு அறிவிப்பு
இது குறித்து ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஊழியர்களுக்கு மெமோ மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பலமுறை காலக்கெடுவை நீட்டித்து வந்த ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் தான் பிப்ரவரி 1ல் இருந்து அலுவலகம் திரும்ப வேண்டும் என உறுதிபடுத்தினார். ஆனால் தற்போதும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பரவல்
முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து மீண்டும் அலுவலகத்தினை திறக்கலாம் என முயற்சி எடுத்து வரும் நிலையில், ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வருகின்றது.

அலுவலகம் வருகை
மேலும் ஹைப்ரிட் பணி மாதிரியையும் இது மேற்கோண்டு தாமதப்படுத்தும் விதமாக சொல்லப்படாத தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் பல இடங்களிலும் அலுவலகம் திறந்து தான் இருக்கிறது. கிரேட்டர் சீனா உள்பட பல அலுவலக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து கொண்டு தான் உள்ளனர்.

தடுப்பூசியே சிறந்த வழி
தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் ஓமிக்ரான் வேகமாக பரவி வருகின்றது. இதிலிருந்து உங்களையும் சமூகத்தினையும் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்த வழியாகும். தடுப்பூசிகளுக்கான பூஸ்டர் ஷாட்கள் கிடைத்தாலும் போட்டுக் கொள்ளுங்கள் என டிம் கும் கூறியுள்ளார்.

எப்போது அலுவலகம் வரலாம்
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஜூன், செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் அலுவலகம் திரும்ப அழைப்பு விடுத்தது. ஆனால் மீண்டும் ஓமிக்ரான் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு இத்தகைய முடிவினை எடுத்துள்ளது. இதோடு இன்னொரு சந்தோஷமான விஷயத்தினையும் ஊழியர்களிடம் டிம் குக் பகிர்ந்துள்ளார். இது மீண்டும் ஒவ்வொரு பணியாளருக்கும் 1,000 டாலர்களை போனஸ் ஆக வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

எதற்காக போனஸ்
இது ஊழியர்களுக்கு இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உதவும். இதனை வீட்டில் இருந்து பணிபுரியும்போது ஏற்படும் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எப்போதெல்லாம் வரலாம்
இதற்கிடையில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்பும்போது திங்கள் மற்றும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் அலுவலகத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவர்கள் இருக்கும் குழுவை பொறுத்து வீட்டில் இருந்து சவேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.