கொரோனாவின் வருகைக்கு பிறகு சர்வதேச அளவில் ஊழியர்களின் பணிபுரியும் கலாச்சாரம் என்பது மாறியுள்ளது. குறிப்பாக வீட்டில் இருந்து பணி, ஹைபிரிட் கலாச்சாரம் என பணி சூழலே மாறியுள்ளது.
எனினும் தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், அலுவலகங்கள் ஊழியர்களை திரும்ப பணிக்கு அழைத்து வருகின்றன.
பல சர்வதேச நிறுவனங்களும் ஹைபிரிட் மாடலை அமல்படுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் கொரோனாவுக்கு முன்பை போலவே படிப்படியாக அலுவகத்திற்கு வரும் படி அழைப்பு விடுத்து வருகின்றன.
ஆபீஸ்-க்கு கூப்பிட்டா வேலை ராஜினாமா.. ஹைபிரிட் மாடலுக்கு அடம்பிடிக்கும் ஊழியர்கள்..!

பலரும் ராஜினாமா?
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் இருந்தே பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கு, தற்போது அலுவலகம் செல்வது என்பது உணர்வுபூர்வமாக கடினமானதாக மாறியுள்ளது. இதனால் பல்வேறு ஊழியர்களும் தங்களது வேலையினை ராஜினாமா செய்து வருவதாகவும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இது தான் விருப்பம்
ஒரு தரப்பினர் அலுவலகம் திரும்புவது குறித்து மிக ஆவலாக இருந்தாலும், ஒரு தரப்பினர் இதனை விரும்பவில்லை. வீட்டில் இருந்தே பணி புரிவதே தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர். ஏனெனில் அலுவலகம் செல்லும் பயண நேரத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என நினைக்கின்றனர். மேலும் இதனால் செலவினமும் குறைவு என நினைக்கின்றனர்.

ராஜினாமா?
டெக் ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனத்தின் மெஷின் லேர்னிங் இயக்குனர், இயன் குட்ஃபெலோவும் அதனைத் தான் உணர்ந்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் அலுவலகம் திரும்ப ஊழியர்களை வலியுறுத்தியுள்ள நிலையில், தனது பணியையே ராஜினாமா செய்துள்ளார்.

நெகிழ்வு தன்மை
இயன் தனது விருப்பத்தினை நிறுவன குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து பணி புரிவது ஒரு நெகிழ்வு தன்மையை அளிக்கும். நிச்சயம் எங்களது அணிக்கு சிறந்த கொள்கையாக இருந்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அலுவலகம் எப்போது வர வேண்டும்
தற்போதைய பணிக் கொள்கையின் படி, ஊழியர்கள் ஏப்ரல் 11ம் தேதி நிலவரப்படி வாரத்தில் ஒரு நாள் பணிக்கு திரும்பலாம். மே 2ம் தேதி நிலவரப்படி வாரத்தில் குறைந்தது 2வது நாளாக பணிபுரியவும், மே 23ம் தேதிக்குள் வாரத்தில் 3 நாள் அலுவலகத்திற்கு திரும்புமாறு ஆப்பிள் கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கையில் சில ஊழியர்கள் மகிழ்ச்சியடையவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்-கிற்கு இது குறித்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.