அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், முதல் நாளிலேயே பல ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
முதல் நாளிலேயே பல கட்டுப்பாடுகளை ரத்து செய்ய கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையில் புதிய குரியுரிமை மசோதா பற்றிய அறிவிப்பினையும் விரைவில் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நாட்டில் சட்டபூர்வ அந்தஸ்து இல்லாமல் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு, 8 ஆண்டு குடியுரிமை திட்டத்தினை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைடனுக்கு பாரட்டு
இதற்கிடையில் பைடனின் இந்த மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கை குறித்து, அமெரிக்காவின் ஐடி நிறுவனங்களா கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. ஏனெனில் இந்த நடவடிக்கையானது பொருளாதாரத்தினை உயர்த்தும், வேலைகளை உருவாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உலகம் முழுவதிலும் உள்ள திறமையாளர்களை ஈர்க்கும் என்றும் கூறியுள்ளன.

பல பெரிய மாற்றங்கள்
பைடன் பதவிக்கு வந்த முதல் நாளே இப்படி அதிரடி நடவடிக்கைகளை எடுத்த நிலையில், பல பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடியுரிமை குறித்தான நடவடிக்கையால் விரைவில், லட்சக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற குழுக்களுக்கு குடியுரிமை வழங்குதல், கீரின் கார்டுகளுக்கு காத்திருத்தல் போன்றவற்றிற்காக பல காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்காவின் வளர்ச்சியினை வலுப்படுத்தும்
US Citizenship Act of 2021 என்றழைக்கப்படும் இந்த சட்டத்தின் மூலம் குடியேற்ற முறையை நவீன மயமாக்குகிறது. இது குடியுரிமைக்கான பாதையை எளிதாக்கும். பைடனின் இந்த முயற்சி அமெரிக்காவை பலப்படுத்தும். இந்த நாடு நீண்டகாலமாக வளர்த்து வரும் வாய்ப்பிற்கான பாதை தான் அமெரிக்கா என்றும் டிம் குக் கூறியுள்ளார்.

கூகுள் ஆதரவு
இதே போல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, பைடனின் இந்த விரைவான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் என கூறியுள்ளார். கூகுள் பைடனின் இந்த முக்கியமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது என பாரீஸ் கால நிலை ஒப்பந்தம், குடியுரிமை சீர்திருத்தம், கொரோனா நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகள் பட்டியலிட்டிள்ளார்.

முதல் பாலிலேயே சிக்சர் தான்
அதோடு பைடனின் இந்த நடவடிக்கைகள் கொரோனாவிலிருந்து மீளவும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும் இது பயன்பெறும். ஆக நாங்கள் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர் நோக்குகிறோம் என்று சுந்தர் கூறியுள்ளார். இவ்வாறு பல தரப்பில் இருந்தும் பிடனின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. எது எப்படியோங்க முதல் பாலிலேயே சிக்சர் தான் போங்க.