ஆப்பிள் ஐபோன் விற்பனை சரிவிலும் கல்லா கட்டிய ஆப்பிள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய, டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

 

இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 64 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பங்குச் சந்தையோ ஆப்பிள் நிறுவனம் 63.01 பிள்ளியன் டாலர் வருவாய் ஈட்டினாலே பெரிய விஷயம் எனச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் கூடுதலாக ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருப்பது தான் ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைப் பற்றி நம்மைப் பேச வைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் விற்பனை சரிவிலும் கல்லா கட்டிய ஆப்பிள்..!

இந்த 64 பில்லியன் டாலர் என்பது கடந்த செப்டம்பர் 2018 காலாண்டை விட 2 சதவிகிதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா உடன் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரேசில் மலேசியா போன்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை காணாத செப்டம்பர் காலாண்டு முடிவுகளைக் கண்டிருப்பதாகச் சொல்கிறார், ஆப்பிள் நிறுவத்தின் முதன்மை நிதி அதிகாரியான லுகா மெஸ்ட்ரி (Luca Maestri). அதோடு இந்தியாவிலும், அமெரிக்காவில் மேக் கம்ப்யூட்டர் விற்பனையால், ஆப்பிள் நிறுவனம் இதுவரை காணாத வருவாயைக் கண்டு இருக்கிறார்களாம்.

உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை, கையில் பணம் இல்லை என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே ஐஃபோன் விற்பனை என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா..? நீங்கள் நினைத்தது போல ஐஃபோன் விற்பனை எண்ணிக்கை (வால்யூம்) அடிப்படையில் சுமாராக 9% சரிந்து இருக்கிறது. ஆனால் ஐஃபோன் வழியாக வரும் வருவாய், சந்தை எதிர்பார்ப்பான 32.25 பில்லியன் டாலரை விட சுமார் 1 பில்லியன் கூடுதலாக 33.36 பில்லியன் டாலர் ஈட்டி இருக்கிறார்களாம்.

ஒரே நாளில் 38% ஏற்றம்.. யெஸ் பேங்கில் என்ன தான் நடக்குது..!

அதோடு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மியூசிப், ஐ க்ளவுட், ஆப்பிள் டிவி + போன்ற சேவைகள் வழியாக ஆப்பிள் நிறுவனத்துக்கு வரும் வருமானம் 18 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் கேமிங் சேவையான ஆப்பிள் அர்கேடின் (Apple Arcade) ட்ரயல் காலம் முடிவடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில், இதில் இருந்தும் ஒரு நல்ல வருமானம் வரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple iphone sales down September 2019 quarterly results

Apple september 2019 quarterly results out. The iPhone sales fell 9% year-on-year but the apple smartphone still beat revenue expectations, earning $33.36 billion dollaragainst the expected $32.25 billion dollar.
Story first published: Thursday, October 31, 2019, 20:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X