ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் பங்குக்கு ரஷ்யா மீது கண்டனம் தெரிவித்து வருகின்றன. தடைகளை விதித்து வருகின்றன. நிறுவனங்கள் பலவும் தங்களது வணிக உறவுகளை முறித்துக் கொண்டு வருகின்றன.
மொத்தத்தில் ரஷ்யாவுக்கு அடி மீது அடியாக விழுந்து வருகின்றது. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்ற நிலையையும் பொருட்படுத்தாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை உக்கிரப்படுத்தி வருகின்றது.
ரஷ்யா படைகள் தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வருவதை செய்தி அறிக்கைகள் மூலம் காண முடிகிறது.
ரஷ்யா முதலாளிக்கு ஆப்பு வைத்த உக்ரைன் ஊழியர்.. துளியும் வருத்தம் இல்லையாம்..!

போலீஸ் தலைமையகம் மீதே தாக்குதல்
தற்போது இந்த நிலை இன்னும் ஒரு படி மேலே போய், உக்ரைனின் போலீஸ் தலைமையகம் மீதே தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கட்டிடங்கள் தீ பிடித்து எரிந்து வருவதையும் ஊடகங்கள் வாயிலாக காணமுடிகிறது. அதுமட்டும் அல்லாது, தொடர்ந்து ரஷ்ய படைகள் உளவு கட்டிடங்களையும் குறி வைத்து தகர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிளின் அதிரடி முடிவு
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான ஆப்பிள், ரஷ்யாவில் அதன் பொருட்கள் விற்பனையை தடை செய்துள்ளது. மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். வன்முறையால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம் என ஆப்பிள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
மேலும் நாங்கள் மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கிறோம். உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளிவரும் மக்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்குகிறோம். மேலும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் அங்கு செய்து வருகின்றோம் என தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி தடை
ரஷ்யாவின் நடவடிக்கையினை கண்டித்து நிறுவனம் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. முதலவதாக அனைத்து ஏற்றுமதியினையும் நிறுத்தியுள்ளது. ஆப்பிள் பே மற்றும் பிற சேவைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே போல ரஷ்ய அரசு ஊடகங்களான RT News மற்றும் Sputnik news உள்ளிட்ட ஆப்களையும் ,ரஷ்யாவுக்கு வெளியேயும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியாது. இப்படி பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்யாவுக்கு எதிராக எடுத்துள்ளது.

டெலிவரி இல்லை
கடந்த செவ்வாய்கிழமையன்று கூட ரஷ்யா பயனர்கள் ஆன்லைனில் ஆப்பிள் ஐபோன் களை ஆர்டர் செய்ய முடிந்ததாகவும், ஆனால் அவை டெலிவரி கிடைக்கவில்லை என்பதையும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. மொத்தத்தில் தனது லாபத்தினையும் கருத்தில் கொள்ளாமல் ஆப்பிள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அதன் மனிதாபிமானத்தை சுட்டிக் காட்டுகின்றது.
மொத்தத்தில் ரஷ்யாவின் உக்கிர நடவடிக்கையால் அடுத்தடுத்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது ரஷ்யா.