ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு.. சீனாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. காரணம் என்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தினை பரப்பி வரும் கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

 

குறிப்பாக சொல்லவேண்டுமானால் 5,436 பேரினை பலி கொண்டுள்ளது.

இது தவிர 1,45.717 பேர் இந்த வைரஸினால் தாக்கம் அடைந்துள்ளனர். அதே போல் இந்தியாவிலும் தற்போது நூறு பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

சில்லறை விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

இந்த நிலையில் ஆப்பிள் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது சீனாவினை தவிர்த்து மற்ற நாடுகளில் தனது சில்லறை விற்பனை நிலையங்களை மார்ச் 27 வரை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியான டிம் குக் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் அதே டிவிட்டர் பக்கத்தில் கூப்பார்டினே டெக் ஜியான்ட் ஆன ஆப்பிள் நிறுவனம் உலக மீட்சிக்காக 15 மில்லியனை செலவிட போவதாக தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக மூடல்

தற்காலிகமாக மூடல்

மேலும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆஃப் லைன் வர்த்தகத்தை மார்ச் 27 வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப நிறுவனமான அதன் ஆன்லைன் இருப்பை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளம் மூலம் தொடர்ந்து உணர வைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

வருவாய் இழப்பு
 

வருவாய் இழப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆப்பிள் கற்றுக் கொண்ட பாடங்களில் ஒன்று அடர்த்தியான இடங்களைப் தவிர்ப்பது. ஆக அந்த வகையில் உலகம் முழுக்க உள்ள தனது சில்லறை விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை பாதிக்கும் என்பதோடு, ஏற்கனவே வருவாய் இழப்பினை பதிவு செய்துள்ள இந்த நிறுவனம் நடப்பு காலாண்டிலும் நஷ்டத்தினை காண வாய்ப்பாக அமையும்.

உற்பத்தி மீள்ச்சி

உற்பத்தி மீள்ச்சி

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் கொரோனா தாக்கம் தெரிய வந்த நிலையில், அங்கு ஆப்பிள் நிறுவனம் மட்டும் அல்லாது, மற்ற பல உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தின. இந்த நிலையில் மீண்டும் தற்போது தான் அங்கு சற்று மீள்ச்சி அடைய தொடங்கிய நிலையில், உலகளாவிய சில்லறை வர்த்தக நிலையங்களை மூட அறிவித்துள்ளது. இது நிச்சயம் அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தினை பாதிக்கும். எனினும் கொரோனா தாக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்க இது வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple to temporarily close all retail stores globally expect china

Apple will be temporarily closing all stores outside of greater china unteil march 27 and committing to help $15 million to help worldwide recovery.
Story first published: Sunday, March 15, 2020, 10:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X