லாக் டவுனில் சிக்கன் பிரியாணி + வஞ்சரம் வறுவல மிஸ் பண்றீங்களா? கறிக்கு இவங்க கிட்ட ஆர்டர் போடுங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மது பானம், புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் எல்லாம் இந்த லாக் டவுனால் அத்தனை சிரமப்படுகிறார்கள்.

 

அதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் இன்னொரு பக்கம் பிரியாணி வெறியர்களும் தங்களுக்கு பிடித்தமான பிரியாணிகளைச் சாப்பிட முடியாமல் துடித்துப் போய் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் ஆறுதல் கொடுக்கும் விதத்தில் ஒரு செய்தி நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறது.

ஆன்லைன் வியாபாரம்

ஆன்லைன் வியாபாரம்

பிரியாணி சாப்பிடவில்லை என்றால் கை கால் எல்லாம் நடுங்கும் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதத்தில் பல கம்பெனிகள் ஆன்லைனில் ஆர்டர் எடுத்து கறி மற்றும் மீன்களை டோர் டெலிவரி செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு நந்துஸ் சிக்கன் என்கிற பெங்களூரூ கம்பெனிக்கு, இந்த லாக் டவுன் காலத்தில் வியாபாரம் 2 மடங்கு அதிகரித்து இருக்கிறதாம்.

65000 ஆர்டர்கள்

65000 ஆர்டர்கள்

லாக் டவுன் முன்பு மாதம் 40,000 ஆர்டர்கள் வந்து கொண்டிருந்தது, இப்போது 65,000 ஆர்டர்களாக அதிகரித்து இருக்கிறதாம். அதோடு ஒவ்வொரு ஆர்டரிலும் சொல்லும் கறி அளவும் அதிகரித்து இருக்கிறதாம். எனவே லாக் டவுனில் மக்கள் வெளுத்து கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

லிசியஸ் (Licious)
 

லிசியஸ் (Licious)

அதே போல லிசியஸ் என்கிற கம்பெனியும் ஆன்லைனில் ஆர்டர் எடுத்து, டோர் டெலிவரி செய்கிறார்களாம். லாக் டவுன் காலத்தில் சுமார் 200 % வியாபரத்தை அதிகரித்து இருக்கிறதாம். இந்த கறிக் கடைப் பெயரை நாம் டிவியில் அடிக்கடி பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த லிசியஸ் கம்பெனி சிக்கன், மீன் போன்ற இறைச்சிகளை, நம் சென்னையில் வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்கிறார்களாம்.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

இந்த வலைதளத்தில் சிக்கன் குழம்புக்கு தகுந்தாற் போல வெட்டுவது, பிரியாணிக்கு தகுந்தாற் போல வெட்டுவது, சிக்கன் கீமா என எல்லா விதத்திலும் வெட்டி வைத்திருக்கிறார்கள். ஆக கறியை வாங்கி, உடனடியாக அடுப்பை பற்ற வைத்து மசாலா தடவி பிரியாணிக்கான வேலைகளை தொடங்கிவிடலாம். அதோடு இறால், கெண்டை போன்ற மீன் வகைகளையும் விற்கிறார்கள்.

விலை விவரம்

விலை விவரம்

லிசியஸ் கம்பெனியில் ஒரு முழு கோழி விலை 280 ரூபாய் தான், மற்ற படி 450 கிராம் கீமா கட் 200 ருபாய், சிக்கன் ட்ரம்ஸ்டிக் 500 கிராம் 200 ரூபாய், சிக்கன் குழம்புக்கான கறி 500 கிராம் 130 ரூபாய், இறால் 250 கிராம் 350 ரூபாய், கட்லா மீன் 500 கிராம் 300 ரூபாய் என விலைப் பட்டியல் நீள்கிறது.

ஒரு ஹாட் பாக்ஸ்

ஒரு ஹாட் பாக்ஸ்

அப்புறம் என்ன, சென்னையிலும் கறி மற்றும் மீன்களை டோர் டெலிவரி செய்வார்கள் என பிரியாணி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கிறோம். வீட்டில் சிக்கன் பிரியாணியும், மீன் வறுவலும் (மட்டன் குழம்பு இருந்தாலும் ஓகேங்க) செய்தால், எங்களுக்கும் ஒரு பெரிய ஹாட் பாக்ஸில் செய்து அனுப்புங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

are you missig chicken biryani and fish fry order online

Due to lock down the chicken and fish sales in online order and deliver has increased drastically. Even licious company is delivering meat in Chennai.
Story first published: Monday, April 20, 2020, 16:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X