மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 147 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் கொரோனா வைரஸ் காரணமாகவும் தேவை சரிவின் காரணமாகவும் வர்த்தக வாகன விற்பனை 28 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே நஷ்டத்திற்கும் வழிவகுத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வருவாய் இரண்டாவது காலாண்டில் 2,837 கோடி ரூபாயாக கண்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 3,930 கோடி ரூபாயாகவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிட்டதட்ட 4 மடங்கு நஷ்டம்
முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் 39 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் கிட்டதட்ட 4 மடங்கு நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி மட்டும் வட்டிக்கு பிறகு வருவாய் (Ebitda) 65 சதவீதம் வீழ்ச்சி கண்டு 80 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. Ebitda மார்ஜின் 3 சதவீதத்தில் இருந்து, 2.8 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

செலவினம்
இது மூலதன செலவு மற்றும் முதலீடுகளுக்குப் பிறகு அசோக் லேலண்ட் 1,208 கோடி ரூபாய் பணத்தினை ஈட்டியது. இது முந்தைய காலாண்டில் இருந்த 4,284 கோடி ரூபாய் கடனை, 3,076 கோடி ரூபாயாக குறைக்க உதவியது என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் வளர்ச்சி அதிகரிக்கலாம்
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அளவு (Volume) நடப்பு நிதியாண்டில் 26 சதவீதம் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும் அதே நேரம் 2022ம் நிதியாண்டு மற்றும் 2023ம் நிதியாண்டில் முறையே 106 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வளர்ச்சியினைக் காணும் என்றும் ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சித் தலைவர் மிதுல் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் Ebitda மார்ஜின் விகிதமானது 2022ம் நிதியாண்டில் 10.8 சதவீதமாகவும், 2023ம் நிதியாண்டில் 11.4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.