ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால் சர்வதேச பொருள் சந்தையில் கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட படிம - எரிபொருள் விலை பெருமளவில் உயர்ந்து வருகிறது.
அதை பயன்படுத்தி காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என இந்திய கோடீஸ்வரர்களான அம்பானி, அதானி இருவரும் பெரும் லாபம் பார்த்து வருகின்றனர்.
சீனாவின் மெகா திட்டம்.. மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத விதமாக உயர்ந்து வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை
உலக நாடுகள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதியைச் செய்துவருகின்றன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழால் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விலை பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

ரஷ்யா
போர் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததால், அங்கு நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியது. எனவே ரஷ்யாவில் கிடைக்கும் அதிகப்படியாகக் கச்சா எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சலுகை விலையில் அளிக்கத் தயார் என அறிவித்தது.

சிக்கல்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய அமெரிக்கா பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருந்தாலும் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் தான் பல்வேறு நாடுகளில் உள்ளன. ரஷ்யாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்யும் தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் இல்லை.

ரிலையன்ஸுக்கு அடித்த யோகம்
இங்கு தான் ரிலையஸுக்கு யோகம் அடித்தது. திருபாய் அம்பானி காலகட்டத்திலிருந்தே ஒரு வணிகத்தைத் தொடங்குவது என்றால் அதன் உயரிய தொழில்நுட்பங்களை ரிலையன்ஸ் வங்கி பயன்படுத்தும். அப்படி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்யும் தொழில்நுட்பம் ரிலையன்ஸிடம் உள்ளது. எனவே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தி அதை சுத்திகரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபத்தை ரிலையன்ஸ் ஈட்டி வருகிறது.

லாபம் அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு தங்களது வணிகத்தில் 60 சதவீத லாபத்தை அளிக்கும் தொழிலாக எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டும் 13,680 கோடி நிகர லாபத்தை ரிலையன்ஸ் பெற்று இருந்தது. நடப்பு காலாண்டில் அதை விட கூடுதல் லாபத்தை ரிலையன்ஸ் பதிவு செய்யும் என கூறப்படுகிறது.

நிலக்கரி விலை
கச்சா எண்ணெய் போல உலக சந்தையில் நிலக்கரிக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள அதானி அதனைப் பயன்படுத்தி லாபம் பார்த்து வருகிறார்.

அதானி எண்டெர்பிரைசஸ்
கோடைக்காலம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரிக்குத் தட்டுப்பாடு இருக்கும். மேலும் போரும் நடைபெற்று வருவதால் நிலக்கரி விலை பெரும் அளவில் அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டு வரை இந்த விலை உயர்வு தொடரும் என கூறப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதானி எண்டெர்பிரைசஸ் லாபம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை அதானி குழுமம் வாங்க உள்ளது. அதற்கும் நிலக்கரி தான் முக்கிய மூலப் பொருள் என்பதால் அதானிக்கு இது மிகப் பெரிய வளர்ச்சியாக்கும் தொழிலாக உள்ளது.

பங்குகள் விலை
காற்றுள்ள போது தூற்றிக்கொள் என இரண்டு நிறுவனங்களின் லாபம் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களையும் வளைத்துப் போட்டு வருகின்றன. எனவே பிப்ரவரி மாதம் 24-ம் தேதியிலிருந்து இப்போது வரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 19 சதவீதமும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது.