ரூ.15 லட்சம் கோடி வேண்டும்! அப்ப தான் இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்குமென ASSOCHAM கருத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ், குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தவிர பெரும்பாலானோர்களை கடுமையாக பாதித்து இருக்கிறது.

 

இந்த வைரஸால், இந்தியா 21 நாள் லாக் டவுனில் இருக்கிறது. இந்த லாக் டவுனால் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள், வழக்கம் போல தங்கள் வியாபாரங்களைச் செய்ய முடியவில்லை.

இதனால் பலரின் வேலை வாய்ப்புகள் தொடங்கி பொருளாதார வாழ்கையே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அசோசெம் (ASSOCHAM) நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

15 லட்சத்தினை தொட்ட கொரோனா தாக்கம்.. இங்கு சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

200 - 300 பில்லியன் டாலர்

200 - 300 பில்லியன் டாலர்

அசோசெம் (ASSOCHAM) அமைப்பின் தலைவர் நிரஞ்சன் ஹிரா நந்தனி, இந்திய பொருளாதாரத்தை தாக்கு பிடிக்கச் செய்யவும், கொரோனா சிக்கலில் இருந்து சில மீட்புத் திட்டங்களைச் சொல்லி இருக்கிறார். அதில் முதல் விஷயம் தான் 200 - 300 பில்லியன் டாலர். இது இந்திய மதிப்பில் சுமாராக 15 - 22 லட்சம் கோடி ரூபாய்.

எதற்கு இவ்வளவு பணம்

எதற்கு இவ்வளவு பணம்

இந்த 15 - 22 லட்சம் கோடி ரூபாய் பணத்தை அடுத்த 12 - 18 மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்தில் செலுத்த வேண்டும். அடுத்த 3 மாதங்களில், 50 - 100 பில்லியன் டாலர் பணத்தை இந்தியப் பொருளாதாரத்தில் கொண்டு வர வேண்டும். அப்போது தான், தொழிலாளிகள் மற்றும் ஊழியர்களை லே ஆஃப் செய்வது குறையும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இது முக்கியம்
 

இது முக்கியம்

இப்படி 200 - 300 பில்லியன் டாலர் பணத்தை இந்தியப் பொருளாதாரத்தில் உள்ளே கொண்டு வருவதால், இந்திய வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், இந்த கொரோனா வால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர முடியும். ஆனால் 3 விஷயங்களை உறுதிப்படுத்த வேண்டும் என பட்டியல் போடுகிறார்

3 விஷயங்கள்

3 விஷயங்கள்

1. ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உடனடி உதவியாக நேரடிப் பணப் பரிமாற்றத்தை, முதலாளிகள் மற்றும் கம்பெனிகள் வழியாகச் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

2. கொரோனா வைரஸால் ஏற்படும் விளைவுகளைச் சமாளித்து தாக்குபிடிக்க கம்பெனிகளிடம் போதுமான பணம் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.

3. இந்தியப் பொருளாதாரத்தில் டிமாண்ட் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, வரி மற்றும் கொள்கை முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் அசோசெம் (ASSOCHAM) தலைவர்.

ஜிஎஸ்டி குறைங்க

ஜிஎஸ்டி குறைங்க

பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதித்து இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை, அடுத்த 3 மாதங்களுக்கு 50 % குறைக்க வேண்டும். இந்த நிதி ஆண்டு முழுக்க 25 சதவிகிதம் குறைக்க வேண்டும் எனவும் வேண்டு கோள் வைத்து இருக்கிறார்.

கெடு தேதி

கெடு தேதி

இது போல சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான காலக் கெடுவை நீட்டிக்கக் கோரி இருக்கிறார்கள். அதோடு வரிகளுக்கு வட்டியும் கேட்கக் கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதே போல 2019 - 20 வருமான வரி மற்றும் 2020 - 21 அட்வான்ஸ் வரி போன்றவைகளுக்கும் கால அவகாசம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் அரசு செய்யுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ASSOCHAM says indian economy need 15 lakh crore to survive coronavirus effect

The The Associated Chambers of Commerce of India (ASSOCHAM) says that the indian economy need minimum 15 lakh crore to survive this worst coronavirus effects.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X