வாங்க தாத்தா பணத்த எடுத்து கொடுக்கிறோம்.. நம்பிய முதியவரை ஏமாற்றிய கில்லாடிகள்.. ரூ.19,000 அபேஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தானே: என்ன தாத்தா பணம் எடுக்கனுமா? வாங்க நாங்க எடுத்து தர்றோம். என்று அன்பாக பேசிய இளைஞர்களை நம்பிய முதியவரிடம் இருந்து, 19,000 ரூபாய் அபேஸ் செய்தனர் இளைஞர்கள்.

 

இந்த மோசமான செயல் எங்கு நடந்தது என்று தானே கேட்கிறீர்கள். வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.

கவனத்தை திசை திருப்பி திருட்டு

கவனத்தை திசை திருப்பி திருட்டு

ஏடிஎம் ஒன்றிற்கு பணம் எடுக்க சென்ற முதியவரின் கவனத்தை திசை திருப்பி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தினை திருடியதாக கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்றும் மஹாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள கோட்பந்தர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உதவி செய்வதாக ஏமாற்றிய இளைஞர்கள்

உதவி செய்வதாக ஏமாற்றிய இளைஞர்கள்

64 வயதான முதியவர் ஒருவர், தானே நகரில் உள்ள கோட்பந்தர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வதாக இரு இளைஞர்கள் நடித்துள்ளனர். முதியவரோ அவர்கள் உதவி செய்வதாக நம்பி ஏமாந்துள்ளார். அவரின் கவனத்தை திசை திருப்பி, முதியவர் அசந்த நேரத்தில் முதியவரின் ஏடிஎம் கார்டையே மாற்றியுள்ளனர்.

ஏடிஎம் மூலம் கைவரிசை
 

ஏடிஎம் மூலம் கைவரிசை

பின் போலி ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது போல நடித்து பணம் வரவில்லை என நம்ப வைத்துள்ளனர். பின்னர் முதியவரின் ஏடிஎம் கார்டை வைத்து உதவி செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனை அறிந்த முதியவர் காசர்வதாவலி போலிசில் பதிவு செய்துள்ளார்.

வேலையே இது தான்

வேலையே இது தான்

போலீசார் விசாரணையின் போது தான் தெரிய வந்துள்ளது. அந்த கில்லாடிகள் இருவரும் இது போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதும், அவர்களுக்கு வேலையே மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிப்பது தான் என்று. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று போலீசார் கியாசுதீன் அபு சித்திக் 26, அப்துல் ரஹ்மான் ஆகா 24 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

பல மோசடிகள் அம்பலம்

பல மோசடிகள் அம்பலம்

மும்ப்ராவில் இருந்த இந்த இருவரின் வீட்டில் இருந்தும் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள், குறிப்பாக சொல்லவேண்டுமானால் 55 ஏடிஎம் கார்டுகள், விலை உயர்ந்த நான்கு மொபைல் போன்கள், 2,200 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதுதவிர இந்த இரு கில்லாடிகள் மீதும் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ATM scam: 64 year old man loses Rs.19,000 in thane

Two thane persons were arrested for allegedly diverting the attention of a senior citizen at an ATM, and they stealing money from his ATM.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X