அமேசான், பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக 'பாபா ராம்தேவ்'.. புதிய ஈகாமர்ஸ் தளம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி விரைவில் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

இத்தளத்தில் பதஞ்சலியின் ஆஸ்தான வர்த்தகக் குறிக்கோள், அதாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஸ்வதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் தளமாக இது இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

பதஞ்சலி அறிமுகப்படுத்துள்ள இப்பூதிய ஈகாமர்ஸ் தளத்தின் பெயர் என்ன தெரியுமா..?

சீனா வேண்டாம்.. ஜெர்மனி நிறுவனம் இந்தியா வர ஆயத்தம்.. கடுப்பில் சீனா..!

பதஞ்சலி

பதஞ்சலி

இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் கூடக் குறிப்பிட்ட அளவிலான வாடிக்கையாளர்கள் வைத்து நாடு முழுவதும் பெரிய அளவிலான வர்த்தகம் செய்யும் பதஞ்சலி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ஈகாரமஸ் தளத்தில் பெயர் OrderMe.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

ரீடைல் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியை அடைந்த பாபம் ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோரின் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்திற்குள் நுழைவதை உறுதி செய்துள்ளது.

இப்புதிய ஈகாமர்ஸ் தளம் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியாக விளங்கும் எனக் கூறப்படுகிறது.

மோடி
 

மோடி

சமீபத்தில் வீடியோ மூலம் மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி, கொரோனா தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை மேம்படுத்த உள்ளூர் பொருட்களுக்கும், தாயரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை "vocal for local" எனக் குறிப்பிட்டார்.

இதனை ஏற்றுத் தற்போது பதஞ்சலி ஆன்லைன் சந்தைக்குள் நுழைந்துள்ளது.

இலவச டெலிவரி

இலவச டெலிவரி

இப்புதிய தளத்தைக் குறித்துப் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறுகையில், "ஸ்வதேசி பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் விற்பனையாளர்களை இத்தளத்தின் மூலம் ஒன்றிணைத்து இந்தியா முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய வழி வகுக்கப்படும். இத்தளத்தின் உதவியின் மூலம் விற்பனையாளர்கள் இலவசமாகப் பொருட்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய முடியும்." எனப் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

முக்கியச் சேவைகள்

முக்கியச் சேவைகள்

இத்தளத்தின் மூலம் மருத்துவ ஆலோசனை தேவைப்படுவோருக்கு இலவசமாக ஆலோசனை வழங்கப்படும். இப்பணியில் பதஞ்சலியின் 1500 மருத்துவர்கள் பணியாற்ற உள்ளனர். இது மட்டும் அல்லாமல் இத்தளத்தில் யோகா பயிற்சியும் கொடுக்கப்படும் என ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளது.

மேலும் இத்தளத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மக்களின் வரவேற்பு அடிப்படையில் அடுத்தடுத்த சேவை மற்றும் பொருட்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev Challenges Amazon, Flipkart With OrderMe

Patanjali Ayurved will soon be launching an exclusive e-commerce marketplace to supply made-in-India items and swadeshi (indigenous) solutions. The name of this platform will be OrderMe. This platform will clearly compete with some of the leading online e-commerce platforms operating in India, viz., Amazon India and Flipkart.
Story first published: Sunday, May 17, 2020, 18:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X