பல்வேறு நாடுகளுக்கும் படையெடுக்க போகும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் அதிரடி திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்களுக்கு எப்படி நடப்பது என்று தெரியாது. ஆனால் ஓடத் தெரியும் என பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

 

யோகா குருவாக அறிந்த இவர் தற்போது சிறந்த வணிகர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் எனலாம். இவரது நிறுவனத்தின் பதஞ்சலி பொருட்கள் சந்தையில் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது.

குறிப்பாக திவால் நிலைக்கு தள்ளப்பட்ட ருச்சி சோயா நிறுவனத்தினை 4350 கோடி ரூபாய்க்கு கைபற்றி, இன்று லாபகரமான நிறுவனமாகவும் மாற்றியுள்ளார் ராம்தேவ்.

லாபத்திற்கு திரும்பியுள்ள பதஞ்சலி

லாபத்திற்கு திரும்பியுள்ள பதஞ்சலி

இதற்கிடையில் இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் வருவாய் 30,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ருச்சி சோயா நிறுவனத்தின் வருவாய் மட்டும் 16,318 கோடி ரூபாயாக உள்ளது. எபிடா விகிதம் 1800 கோடி ரூபாயாகும். திவால் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு நிறுவனம் இன்று லாபத்திற்கு திரும்பியுள்ளது.

சர்வதேச பிராண்ட்

சர்வதேச பிராண்ட்

உள்நாட்டு சந்தையில் வளர்ச்சியினை ஓரளவுக்கு மேம்படுத்தியிருந்தாலும், தற்போது உலகளவில் தனது விரிவாக்கத்தினை மேம்படுத்த இந்த நிறுவனம் முயற்சி செய்து வருகின்றது. இதுவரையில் உள்ளூர் பிராண்டாக இருந்த பதஞ்சலி, இனி சர்வதேச பிராண்டாக மாறலாம். அதே போல தேவை அதிகம் இருந்தால், அங்கு உற்பத்தியினை கூட அமைக்கலாம் என தெரிவித்துள்ளது.

பங்கு விற்பனைக்கு திட்டம்
 

பங்கு விற்பனைக்கு திட்டம்

பதஞ்சலி எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்பது போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதோடு ருச்சி சோயாவை கடன் இல்லா நிறுவனமாக மாற்றுவதையும் நிறுவனம் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காக 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடன் இல்லா நிறுவன திட்டம்

கடன் இல்லா நிறுவன திட்டம்

மேலும் கிடைக்கும் வருமானத்தில் 62% கடனுக்கும், 14% பணி மூலதனத்திற்கும் மற்றும் பிராண்ட் உருவாக்கம், விற்பனை மற்றும் உற்பத்தினாக இருப்புக்கும் பயன்படும். ஆக மொத்தத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடன் இல்லா ஒரு நிறுவனமாக இருக்க விரும்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev plans to export patanjali products to other countries

Baba ramdev’s patanjali plans to export for other countries, also ramdev looking at making ruche soya debt free.
Story first published: Thursday, July 22, 2021, 20:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X