பாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரிகோணாசனம், நவுகாசனம், பக்‌ஷிமோதாசனம், மயூராசனம் என யோகா எடுக்கத் தொடங்கி இன்று உலகம் முழுக்க ஒரு பிரபல தொழிலதிபர் ரேஞ்சுக்கு வளர்ந்து இருக்கிறார் நம் யோகா குரு ராம் தேவ்.

 

இவருடைய யோகா பாடங்களுக்கு வட இந்தியாவில் மட்டும் இன்றி, தற்போது தென் இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு யோகா உதவும் என்று சொன்னவர் திடீரென ஆயுர்வேத பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்.

பங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

2006

2006

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து, பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, ஆயுர்வேத பொருட்களை தயரித்து வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின், இவரின் வளர்ச்சி கொஞ்சம் அசுரத் தனமாகத் தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருக்கும் ஹிந்துஸ்தான் யுனிலிவரையே ஒரண்டைக்கு இழுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சவால்

சவால்

இன்னும் சில ஆண்டுகளில், ஹிந்துஸ்தான் யுனிலிவரை பின்னுக்குத் தள்ளி விடுவோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் சுமாராக 50,000 முதல் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என நேரடியாக மற்ற நிறுவனங்களுக்கு சவால் விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஸ்பெஷல் கவனிப்பு
 

ஸ்பெஷல் கவனிப்பு

சமீபத்தில் ருச்சி சோயா என்கிற சமையல் எண்ணெய் நிறுவனத்தை வாங்க தொழிலபதிபர் கெளதம் அதானி சுமார் 6,000 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முயற்சி செய்தார். ஆனால் வெறும் 4,350 கோடி ரூபாய்க்கு டீலை முடித்தது பதஞ்சலி நிறுவனம். அதோடு சுட சுட 3,200 கோடி ரூபாய் வங்கிக் கடன் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே பெரிது

உலகிலேயே பெரிது

உத்திரப் பிரதேச மாநிலத்தில், நொய்டா பகுதியில் சுமார் 6,000 கோடி ரூபாய் செலவில், 455 ஏக்கரில் பதஞ்சலி நிறுவனத்துக்கான உணவு பார்க் ஜரூராக தயாராகிக் கொண்டு இருக்கிறது. இது தான் உலகின் மிகப் பெரிய ஃபுட் பார்க் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது போல மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், அஸ்ஸாம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் தன் ஃபுட் பார்க்குகளைக் கட்ட திட்டம் வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அதே ஸ்பெஷல் தான்

அதே ஸ்பெஷல் தான்

இப்போதும் அதே போல மேலிடத்தில் இருந்து, பதஞ்சலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு வந்து இருக்கிறது. டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், டெர்மினல் 3-ல், Departure பகுதியில், சுமாராக 1,000 சதுர அடிக்கு ஒரு பிரம்மாண்ட அவுட் லெட்டை, நாளை தொடங்க இருக்கிறார்களாம். இந்த கடை திறப்பு விழாவுக்கு பயணிகள் விமான சேவைத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியே வரப் போகிறாராம்.

ஏற்கனவே இருக்கே

ஏற்கனவே இருக்கே

இதற்கு முன்பே பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனமும், JHS Retail நிறுவனமும் இணைந்து டெல்லி, சண்டிகர், ராய்பூர் போன்ற விமான நிலையங்களில் கடை நடத்திக் கொண்டிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது. இந்த புதிய டெர்மினல் 3 கடையையும் JHS Retail நிறுவனத்துடன் இணைந்து தான் நடத்தப் போகிறதாம்.

மற்ற விமான நிலையங்கள்

மற்ற விமான நிலையங்கள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் கடையைத் திறந்து இருப்பது போல, விரைவில் கொல்கத்தா, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகர விமான நிலையங்களிலும் கடை திறக்க இருக்கிறார்களாம். இப்படி கடை திறப்பதையும் தங்கள் பதஞ்சலி நிறுவனத்தின் திட்டங்களில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் பதஞ்சலியின் பேச்சாளர் எஸ் கே திஜாராவாலா.

ஏன் விமான நிலையத்தில் கடை

ஏன் விமான நிலையத்தில் கடை

இந்த கடையின் வழியாக, இந்தியாவின் பாரம்பரிய ஆயுர்வேதத்தை, உலகம் முழுக்க ப்ரொமோட் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். அடுத்த நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் சுமாராக 35,000 - 40,000 கோடி ரூபாயை வருவாயாக ஈட்ட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால், இந்தியா முழுக்க பதஞ்சலி தான் நிரம்பி வழியும் போலிருக்கிறதே..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

baba ramdev to open patanjali outlet in delhi IGI airport

Yoga guru baba ramdev is going to open patanali ayurved outlet in Delhi Indira gandhi international airport tomorrow.
Story first published: Tuesday, February 18, 2020, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X