மோசமான நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை.. எப்போது மீண்டு வரும் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா-க்கு முன்பும் சரி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்பும் சரி இந்தியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட துறை என்றால் அது ஆட்டோமொபைல் துறை தான். ஏற்கனவே பல்வேறு வர்த்தகப் பாதிப்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் அறிமுகம், குறைந்த லாபம், BS6 தரம் குறித்த பிரச்சனை எனத் தொடர்ந்து மோசமான நிலையிலிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறை, கொரோனா பாதிப்பிற்குப் பின் முழுமையாக முடங்கியுள்ளது.

 

இந்தியாவில் லாக்டவுன் 4.0 நடைமுறையில் இருக்கும் நிலையில், பல்வேறு தளர்வுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஆட்டோமொபைல் துறை தனது உற்பத்தியைத் துவங்கியது. ஆனாலும் மாருதி சுசூகி, ஹூண்டாய் நிறுவன ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ஆட்டொமொபைல் துறை இயல்பு நிலைக்கு அதாவது 2018-19ஆம் நிதியாண்டில் அடைந்த உச்ச வரம்பை அடையக் குறைந்தது 6 வருடம் ஆகும் என உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிறுவனமான Bosch தெரிவித்துள்ளது.

தவிக்கும் சீனா.. ஒரு பக்கம் கொரோனா.. மறுபுறம் அமெரிக்கா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ..!

வருடாந்திர முடிவுகள்

வருடாந்திர முடிவுகள்

Bosch தனது 2020ஆம் நிதியாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது, இந்த அறிக்கையில் இந்நிறுவனத்தின் லாபம், வருவாய் ஆகியவற்றைத் தாண்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தை குறித்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை சில உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை

இந்திய ஆட்டோமொபைல் துறை

கொரொனா பாதிப்பு எதுவும் இல்லாத சமயம் அதாவது 2019-20ஆம் நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சுமார் 17 சதவீத விற்பனை மற்றும் வர்த்தகச் சரிவை சந்தித்துள்ளது என Bosch தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் புதிய வாகனங்கள் சார்ந்துள்ள பல வர்த்தகம் பாதிக்கப்பட உள்ளது அதிலும் குறிப்பாக வாகனங்களின் சர்வீஸ், இன்சூரன்ஸ், அரசுக்கான வரி வருவாய், இப்படிப் பல பாதிப்புகள் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் 2020-21 நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சுமார் 30 சதவீத வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான காலம்
 

மோசமான காலம்

இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தொடர் வர்த்தகப் பாதிப்பின் காரணமாக, கொரோனா பாதிப்புகள் முடிந்த பின்பும் அடுத்தச் சில வருடங்களுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறை மிகவும் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே சந்திக்கும் என நிலை உருவாகியுள்ளது.

20 லட்சம் கோடி ரூபாய் திட்டம்

20 லட்சம் கோடி ரூபாய் திட்டம்

மேலும் மத்திய அரசு இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மீண்டு வர தற்போது அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு எவ்விதமான அறிவிப்பு இல்லை.

இது இந்திய ஆட்டோமொபைல் துறையைக் கூடுதலாகப் பாதிக்கும்.

வரி

வரி

உலகிலேயே கார்களுக்கு அதிகளவிலான வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு கார் குறைந்தபட்சம் 29 முதல் 50 சதவீதம் வரையில் வரி விதிக்கப்படுகிறது.

6 வருடம்

6 வருடம்

இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை, தற்போது இருக்கும் சூழ்நிலையில் இருந்து மீண்டு வர குறைந்தபட்சம் 6 வருடம் ஆகும் என Bosch தெரிவித்துள்ளது. இதோடு மத்திய அரசிடம் இருந்து அதிகப்படியான சலுகைகள் வந்தால் மட்டுமே இது சாத்தியம் எனவும் Bosch தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

கடைசியாக, தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கப்படும் போது, அடுத்த 1 வருடத்திற்கு ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புப் பிரச்சனை அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. இதேபோல் பழைய கார்கள் அதிகளவில் சந்தையில் விற்பனைக்காக வரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: automobile industry auto india
English summary

Bad phase to Indian auto industry: It take 6 years to recover

Indian automobile industry may take up to six years to get back to peak volume levels of 2018-19 and needs incentives from the government to recover faster. 2020-21 when demand may contract by up to 30 per cent. Sales in automobile industry in 2019-20 had contracted by 17 per cent, the worst in over two decades.
Story first published: Monday, May 25, 2020, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X