இந்த பைக், கார் விலையும் அதிகரிக்க போகுது.. முன்னாடியே பிளான் பண்ணுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி வாகன நிறுவனங்கள் பலவும் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக வாகன விலையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் விலையை ஏற்கனவே அதிகரித்தும் உள்ளன.

 

ஏற்கனவே ஒரு புறம் எரிபொருட்கள் விலையானது மக்களை பாடாய் படுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் 100 ரூபாயினை தாண்டியுள்ளது.

ரூ.92,147 கோடி அவுட்.. 6 முன்னணி நிறுவனங்கள் பெரும் இழப்பு.. கொடுத்த லாபம் எல்லாம் போச்சே..!

என்ன தான் காரணம்? நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தானே சில வாகன நிறுவனங்கள் விலையை அதிகரித்தன. இதற்கிடையில் சில நிறுவனங்கள் இரண்டாவது முறையும் விலையை அதிகரித்துள்ளன. சில நிறுவனங்கள் விலையை அதிகரிக்க போவதாக தகவல்கள் வெளியாகவுள்ளன.

வாகன விலை அதிகரிப்பு

வாகன விலை அதிகரிப்பு

நடப்பு மாத தொடக்கத்தில் தான் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 1, 2021ல் இருந்து 3,000 ரூபாய் வரை அதிகரித்தது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பினை செய்தது.

பஜாஜ் ஆட்டோ விலை அதிகரிப்பு

பஜாஜ் ஆட்டோ விலை அதிகரிப்பு

இதற்கிடையில் தற்போது இன்றைய இளைய தலைமுறையினரின் விருப்பமான பைக்கான பல்சரின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து வெளியான செய்தியில், Pulsar 180 Dagger Edge என்ற மாடலின் விலை முன்னர் 1,09,907 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1,13,363 ரூபாயாக (EX -showroom, delhi) அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 3,456 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மகேந்திரா அண்ட் மகேந்திரா விலை அதிகரிப்பு
 

மகேந்திரா அண்ட் மகேந்திரா விலை அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளாரான மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், அதன் அனைத்து வாகனங்களுக்குமான விலையினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது ஜூலை 2021 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது மூன்றாவது முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும், இரண்டாவது முறையாக மே மாதத்திலும் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எவ்வளவு விலை அதிகரிப்பு

எவ்வளவு விலை அதிகரிப்பு

மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் அனைத்து வகையான வாகனங்களின் விலையும், சுமார் 1 லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அதன் XUV500 ரக வாகனங்களுக்கான விலையானது 2,912 ரூபாய் முதல் 3,188 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. KUV100 NXTந் விலையானது 3016 - 3344 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கலாம்

ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கலாம்

W8 and W8(O) ரக காரின் விலையானது 18,970 ரூபாய் முதல் 24,266 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போலேரோ விலையானது 21,000 ரூபாய் முதல் 22,600 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அதன் பிக்விக் வாகனத்தின் விலையானது 42,300 - 1,02,000 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bajaj hikes prices of its pulsar 180, Mahindra hikes prices of alla models; check details

Automobile sector updates.. Bajaj hikes prices of its pulsar 180, Mahindra hikes prices of alla models; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X