பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்! ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும் அழுத்தத்தையும் சிக்கலையும் விவரிக்கத் தேவை இல்லை. மக்கள் கையில் பணம் இல்லாமலும், வியாபாரிகள் வியாபாரத்தைச் செய்ய முடியாமலும் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படி, கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் ஒட்டு மொத்த பொருளாதார சிக்கல்களையும், கடன் கொடுத்து தொழிலை பெருக்கி, பொருளாதாரத்தை மீட்க வேண்டிய முக்கியமான இடத்தில் வங்கிகள் தான் இருக்கின்றன.

ஆனால் வங்கிகளே ஒரு மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியுமா?

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

செயல்படாத கடன் (Non Performing Assets) தான் அந்த சிக்கல். ஒருவர் வாங்கிய கடனுக்கு 90 நாட்களுக்கு மேல் அசலோ, வட்டியோ திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அதை செயல்படாத கடன்கள் (Non Performing Assets) பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு இந்த கடனுக்கான வட்டியோ அசலோ வரவில்லை என்றால், அதை வாரா கடனாக (Written off debts) எழுதிவிடுவார்கள்.

என்பிஏ செப்டம்பர் கணக்கு

என்பிஏ செப்டம்பர் கணக்கு

கடந்த செப்டம்பர் 2019 கணக்குப் படி, செயல்படாத கடன்கள் மட்டும் இந்திய வங்கிகளுக்கு சுமாராக 9.35 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறதாம். இது இந்திய வங்கிகள் கொடுத்து இருக்கும் மொத்த கடனில் சுமாராக 9.1 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அதில் 9.1 ரூபாய் செயல்படாத கடனாக இருக்கிறதாம்.

என்பிஏ அதிகரிக்கலாம்
 

என்பிஏ அதிகரிக்கலாம்

இப்போது, இந்த செயல்படாத கடன்களின் அளவு, கொரோனா லாக் டவுனால் சுமாராக 18 - 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அதில் 18 - 20 ரூபாய் செயல்படாத கடன்களாக மாறலாம் என்கிறார்கள்.

அரசு வங்கிக்கு பணம்

அரசு வங்கிக்கு பணம்

இந்த செயல்படாத கடன் பிரச்சனையில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள, அரசு வங்கிகளுக்கு, சுமாராக 1.5 லட்சம் கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டி இருக்கும் என்கிறது இந்தியா டுடே பத்திரிகை. அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு பணம் கொடுப்பதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள், 2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லி இருக்கிறார்களாம்.

வங்கி தரப்பு

வங்கி தரப்பு

சரி மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு பணத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அரசு முழு பணத்தையும் கொடுப்பது சந்தேகம் தான். காரணம் அரசிடம் போதுமான பணம் இல்லை. அரசு பாண்டுகளை வெளியிட்டு வங்கிகளுக்கு பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என வங்கி தரப்பில் சொல்கிறார்கள்.

எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்

எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், மத்திய அரசு, வங்கிகளுக்கு சுமாராக 3.5 லட்சம் கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த 2020 - 21-க்கான பட்ஜெட் அறிவிப்பில், வங்கிகளுக்கு பணத்தை கொடுப்பது தொடர்பாக எந்த நிதி ஒதுக்கீடுகளையும் அறிவிக்கவில்லையாம்.

பங்குச் சந்தைக்கு போங்க

பங்குச் சந்தைக்கு போங்க

பொதுத் துறை வங்கிகளுக்கு புதிதாக நிதியைக் கொடுப்பதற்கு பதிலாக, வங்கிகளை பங்குச் சந்தைகள் வழியாக பணத்தை திரட்டிக் கொள்ளச் சொல்லி ஊக்குவித்து இருக்கிறது மத்திய அரசு. ஆனால் இப்போது இருக்கும், சூழலில் பங்குச் சந்தை வழியாக பணத்தை திரட்டிக் கொள்வது எல்லாம், அத்தனை எளிதான காரியம் இல்லை எனபதை கடந்த காலங்களில் பங்குச் சந்தை சரிந்து இருப்பதைப் பார்த்தாலே தெரியும்.

என்ன செய்யப் போகிறார்கள்

என்ன செய்யப் போகிறார்கள்

வங்கிகள் புதிதாக கடனைக் கொடுத்து, தொழிலையும், வியாபாரத்தையும் பெருக்கவில்லை என்றால் இந்திய பொருளாதாராம், இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வது சிரமமாகிவிடும். ஆக, இந்த பிரச்சனையை மத்திய அரசும், பொதுத் துறை வங்கிகளும் எப்படி சமாளிக்க இருக்கிறார்கள் என்பதை அடுத்த சில மாதங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Recapitalization: Govt may need to pump Rs 150000 crore in Govt banks

Bank Recapitalization: The central government may need to pump Rs 1.5 lakh crore in to public sector banks to overcome the NPA problem. The existing coronavirus lock down may double the NPA as per Reuters report.
Story first published: Thursday, May 28, 2020, 14:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X