வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் மார்ச் 28, 29-க்கு ஒத்திவைப்பு..! நாளை வங்கிகள் இயங்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் 'தொழிலாளர் விரோத' கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளதாக அறிவித்த நிலையிஸ், இந்த போராட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதி-க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் நாளை அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் இயங்கும், வங்கி சேவைகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.

 

சிபிஐ-யிடம் சிக்கிய அனந்த் சுப்பிரமணியன்.. சென்னையில் 3 நாட்களாக துருவித் துருவி கேள்வி..!

 மத்திய தொழிற்சங்கங்கள்

மத்திய தொழிற்சங்கங்கள்

டிசம்பர் மாதம் பட்ஜெட் கூட்டம் துவங்கும் முன்பு பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ஜனவரி 3, 2022 அன்று, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) மத்திய குழுவும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.

 வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம்

முன்னதாக 2021ஆம் ஆண்டில் மார்ச், டிசம்பர் மாதங்களில் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசின் 'தொழிலாளர் விரோத' கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

 எதற்காக இந்தப் போராட்டம்
 

எதற்காக இந்தப் போராட்டம்


டிசம்பர் 3ஆம் தேதி மத்திய வர்த்தக அமைப்புகள், துறைவாரியான இந்தியத் தொழிலாளர் அமைப்புகளின் கூட்டணி தளத்தின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 3, 2021ல் கூட்டியது, இக்கூட்டத்தில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு நாள்-ஐ தீர்மானிக்கப்பட்டது.

 முக்கிய அமைப்புகள்

முக்கிய அமைப்புகள்

இந்த மத்திய கூட்டுத் தளத்தில் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC போன்ற பல அமைப்புகள் உள்ளது. இந்தப் போராட்டம் சுமார் 12 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 தனியார்மயமாக்கல்

தனியார்மயமாக்கல்

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்துத் துறை அமைப்புகளும் வைக்கும் மிக முக்கியமான கோரிக்கை மத்திய அரசின் தனியார்மயமாக்கல்-ஐ நிறுத்த வேண்டும் என்பது தான். மேலும் வங்கி அமைப்புகள் தொழிலாளர் விதிகள் மற்றும் டிபென்ஸ் சர்விசஸ் விதிகளைத் தகர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பொதுத்துறை வங்கி சேவை பாதிப்பு

பொதுத்துறை வங்கி சேவை பாதிப்பு

இதன் மூலம் பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதியன்று திட்டமிட்டு இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதி-க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் நாளை அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் இயங்கும், வங்கி சேவைகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.

மார்ச் மாத 2 நாள் வங்கி ஊழியர்கள் போராட்டத்தின் நிலவரம் மார்ச் மாதம் தெரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank unions 2 day strike postponed to march 28-29, trade unions called off Feb 23-24 strike

Trade Union Defers Nationwide Bandh to March 28 and 29, Bank unions 2 day strike postponed to march 28-29, trade unions called off Feb 23-24 strike | Bank Strike Date and Time: List of Banks Which Are Closed வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. பிப்ரவரி 23, 24 வங்கிகள் மூடல்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X