வங்கிகள் பங்கு தரகர்களுக்கு பிணையமில்லாத இன்ட்ரா-டே நிதியை வழங்கும் நடைமுறையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கட்டுபாட்டாளர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வரும் இந்த திட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக கட்டுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய 3 அதிகாரிகள்.. ஆட்டம் காணும் அஸ்திவாரம்..!
இன்ட்ரா டே ஃபண்டிங் அல்லது டே லைட் எக்ஸ்போஷர் என கூறப்படும் இந்த வசதியானது, பங்கு வாங்குபவர்களிடம் இருந்து பணம் பெறுவதற்கு உள்ள இடைவெளியை கடக்க அல்லது டெரிவேட்டிவ்களுக்கு வர்த்தக வரம்பிற்கு பணம் செலுத்துவதற்கும் தரகர்களுக்கு உதவுகிறது.

மார்ஜின் இருக்கணும்
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 4 தனியார் துறை வங்கிகளுக்கு இது போன்ற இன்ட்ரா டே கிரெடிட்கள் நிலையான வைப்புகள் மற்றும் சந்தைபடுத்தக் கூடிய பத்திரங்களாக 50% மார்ஜின் இருக்க வேண்டும் என இரண்டு மூத்த வங்கியாளர்கள் எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு இருக்கணும்?
ஆக இன்ட்ரா டே ஃபண்டாக 500 கோடி ரூபாயினை ஈர்க்கும் ஒரு தரகர், 250 கோடி ரூபாய்க்கு பிணையமாக கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆக தரகு நிறுவனங்கள் பிணையங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் சிறு சிறு தரகர்கள் சவால்களை எதிர்கொள்ளலாம். அவர்களின் செலவினங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

புகார்கள்
சமீபத்தில் பங்கு முதலீட்டாளர்கள் நலன் கருதி பொது அதிகார பத்திர முறையில், புதிய விதிமுறையை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, செபி அறிமுகப்படுத்தியது. தற்போது பங்கு சேமிப்புக்கான டீமேட் கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு ஆகியவற்றின் விண்ணப்பத்துடன் பொது அதிகார பத்திரத்திலும் முதலீட்டாளர்களிடம் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் இந்த பொது அதிகார பத்திர உரிமம் மூலம் பல முறைகேடுகள் நடப்பதாக செபிக்கு பல புகார்கள் வந்துள்ளன.

அனுமதியின்றி வர்த்தகம்
குறிப்பாக, இந்த பத்திரம் மூலம் முதலீட்டாளர்களின் அனுமதியின்றி அவர்களின் பங்குகளில் வர்த்தகம் புரிவது, வரம்புத் தொகை குறைந்தால் பங்குகளை விற்று விடுவது போன்றவற்றை பங்குத் தரகு நிறுவனங்கள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க தான், இனி பங்குகளை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் டி.டி.பி.ஐ., என்ற தனி ஆவணம் பயன்படுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை செபி அறிமுகப்படுத்தியது.

பங்கு தரகர்களுக்கு என்ன உரிமை
இந்த ஆவணம் பங்கு வர்த்தகம் தொடர்பாக ஒருவர் சார்பில் பங்குகளை விற்று, கணக்கை முடிப்பதற்கான உரிமையை மட்டும் பங்கு தரகு நிறுவனங்களுக்கு அளிக்கிறது. அதுபோல, வரம்புத் தொகைக்காக பங்குகளை அடமானம் வைக்கவும், அடமானப் பங்குகளை மீட்பதற்கும் இந்த ஆவணம் உரிமை தருகிறது.
இந்த புதிய விதிமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், முதலீட்டாளர்களிடம் பெறும் பொது அதிகார பத்திர உரிமையை தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும் என செபி தெரிவித்துள்ளது.