இந்தியாவில் வங்கி மற்றும் நிதியியல் சேவைகளில் பெரும்பாலானவை நம்முடைய ஸ்மார்ட்போன்கள் வாயிலாகவே இன்றைய நவீன உலகில் கிடைத்துவிட்டாலும், சில முக்கியமான சேவைகளை வங்கிகளுக்குச் சென்று தான் பெற வேண்டும்.
அப்படி நீங்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கும் பட்சத்தில் இந்த மே மாத வங்கி விடுமுறை நாட்களைத் தெரிந்துகொண்டு செல்லுங்கள்.
முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு.. கவனிக்க வேண்டிய ஐசிஐசிஐ வங்கி!

தனியார், பொதுத்துறை வங்கிகள்
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் மே மாதத்தின் 31 நாளில் பல்வேறு விடுமுறைகள் காரணமாகப் பத்து நாட்களுக்கு மூடப்பட உள்ளது. இதனால் வங்கிக்குச் செல்லும் முன்பு இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை அனைவருக்கும் உருவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, மே மாத தொடக்கத்தில் வங்கிகள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அனைத்து மாநிலத்திலும் 4 நாள் தொடர் விடுமுறை இல்லை, சில மாநிலங்களில் மட்டுமே.

10 நாள் விடுமுறை
மே 1 (ஞாயிறு): மே தினம் - நாடு முழுவதும் விடுமுறை / மகாராஷ்டிரா தினம் - மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை
மே 2 (திங்கட்கிழமை): மகரிஷி பரசுராம் ஜெயந்தி - பல மாநிலங்கள் விடுமுறை
மே 3 (செவ்வாய்க்கிழமை): இதுல் பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகா)
மே 4 (புதன்கிழமை): இதுல் பித்ர் - தெலுங்கானா மாநிலத்தில் விடுமுறை
மே 9 (திங்கட்கிழமை): குரு ரவீந்திரநாத் ஜெயந்தி - மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் விடுமுறை
மே 13 (வியாழன்): இதுல் பித்ர் - தேசிய விடுமுறை
மே 14 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
மே 16 (திங்கட்கிழமை): மாநில தினம், புத்த பூர்ணிமா - சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள் விடுமுறை
மே 24 (செவ்வாய்): காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் - சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை
மே 28 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

டிஜிட்டல் வங்கி சேவை
மேலும் இந்த 10 நாட்களில் வங்கிகள் விடுமுறை என்றாலும் ஏடிஎம், கேஷ் டெப்பாசிட் மெஷின், இணைய வங்கி, மொபைல் வங்கி சேவைகள் அனைத்தும் கிடைக்கும். இதனால் அடிப்படை பணப் பரிமாற்றத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.