வெறும் 6 மாதத்தில் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒத்திவைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகள் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடனை தனது கணக்கில் ஒத்திவைத்துள்ளது (Write off) என லோக்சபாவில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்திய பொருளாதாரத்தை மாற்றப்போகும் 5 முக்கிய காரணிகள்.. இதையும் கொஞ்சம் கவனியுங்க..!

கடனை ஒத்திவைப்பு, கடனை தள்ளுபடி

கடனை ஒத்திவைப்பு, கடனை தள்ளுபடி

கடனை ஒத்திவைப்பதிற்கும், கடனை தள்ளுபடி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடனை தள்ளுபடி செய்வது எனில் கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை, கடனை ஒத்திவைப்பது என்பது வருடாந்திர நிலை கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றுவது தான் இந்த கடன் ஒத்திவைப்பு. இதை வங்கிகள் தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செய்து கடனை வசூலிக்கும்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அடிப்படையிலும், வங்கி நிர்வாகங்கள் ஒப்புதல் அளித்த கொள்கையின் அடிப்படையிலும், 4 வருடங்களுக்கு பின் வாராக் கடனை வங்கி நிதியியல் கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்கில் மாற்றப்பட்டு உள்ளது.

பகவத் கரட்
 

பகவத் கரட்

இதுக்குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் பகவத் கரட் எழுத்துப்பூர்வமாக கொடுத்த பதிலில் வங்கிகள் வரி சலுகை மற்றும் மூலதனத்தை சிறப்பாக பயன்படுத்த தங்களது இருப்புநிலை அறிக்கையை மேம்படுத்தும் பொருட்டு இந்த கடன் ஒத்திவைப்பு பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

 46,382 கோடி ரூபாய் கடன்

46,382 கோடி ரூபாய் கடன்

இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் வர்த்தக வங்கிகள் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்துள்ளது.

திருப்பி செலுத்த வேண்டும்

திருப்பி செலுத்த வேண்டும்

மேலும் ஒத்திவைக்கப்பட்டு உள்ள கடனை, கடன் பெற்றவர்கள் கட்டாயம் திரும்ப செலுத்த வேண்டும், அதற்கான பணிகளை வங்கி நிர்வாகம் எடுக்கும் என மத்திய நிதியமைச்சகத்தின் பகவத் கரட் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks write off Rs 46,382 crore NPA in H1 of 2021-22FY

Banks write off Rs 46,382 crore NPA in H1 of 2021-22FY வெறும் 6 மாதத்தில் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒத்திவைப்பு..!
Story first published: Tuesday, November 30, 2021, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X