அடுத்த 5 வருட ஐபிஎல் யாருக்கு.. களத்தில் இறங்கும் ரிலையன்ஸ், அமேசான்.. எகிரும் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைத் தாண்டி அதைச் சார்ந்த வர்த்தகம் ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து, வருவாய் அளவீடுகள் தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 ஐபிஎல் சீசன்களுக்கான ஒப்பந்தத்தைப் பிசிசிஐ ஏலம் விட உள்ளது.

 

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அதிகளவிலான போட்டிகள் இருக்கும் நிலையில் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் புதிதாக இரு ஜாம்பவான்கள் களத்தில் இறங்க உள்ள காரணத்தால் பிசிசிஐ வரலாறு காணாத தொகையை இந்த ஏலத்தின் மூலம் பெறத் திட்டமிட்டுள்ளது.

முகேஷ்-க்கு விளையாட்டு, அனில்-க்கு சினிமா.. கலக்கும் அம்பானி பிரதர்ஸ்..!

ஐபிஎல் 2021 விளம்பர விலை

ஐபிஎல் 2021 விளம்பர விலை

ஐபிஎல் 2021 2வது கட்ட போட்டிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், இப்போட்டிகளுக்கு இடையில் ஓளிப்பரப்பாகும் விளம்பரங்களுக்கு மிகப்பெரிய தொகையை ஸ்டார் நெட்வொர்க் வாங்கியுள்ளது. வெறும் 10 நொடி விளம்பரத்திற்குச் சுமார் 17.2 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை வசூலித்துள்ளது ஸ்டார் நெட்வொர்க்.

ஸ்டார் நெட்வொர்க்

ஸ்டார் நெட்வொர்க்

ஐபிஎல் 2021 போட்டிகள் 2கட்டங்களாக நடந்த காரணத்தாலும், விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதிக்காத காரணத்தாலும் ஸ்டார் நெட்வொர்க் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளில் மட்டும் சுமார் 2,950 கோடி ரூபாய் அளவிலான விளம்பர வருமானத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஒளிபரப்பு
 

ஐபிஎல் ஒளிபரப்பு

பொதுவாக ஐபிஎல் ஒளிபரப்பு வர்த்தகத்தைப் பெற ஸ்டார் நெட்வொர்க் மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்கள் மத்தியில் தான் அதிகளவில் போட்டி இருக்கும். ஸ்டார் நெட்வொர்க் ஐபிஎல் போட்டிகளுக்காகவே சுமார் 16000 கோடி ரூபாய் அளவிலான தொகை இதுவரை முதலீடு செய்துள்ளது. இதனால் இப்போட்டியில் ஸ்டார் நெட்வொர்க் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

வாய்காம்18 மற்றும் அமேசான்

வாய்காம்18 மற்றும் அமேசான்

ஆனால் இந்த வருடம் போட்டி சற்று உக்கிரமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் முகேஷ் அம்பானியின் வாய்காம்18 மற்றும் அமேசான் நிறுவனமும் ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைக் கைப்பற்றக் களத்தில் இறங்குகிறது.

இரு புதிய ஐபிஎல் அணிகள்

இரு புதிய ஐபிஎல் அணிகள்

இதுமட்டும் அல்லாமல் புதிதாக இரு அணிகள் அறிமுகம் செய்யப்படும் காரணத்தால் போட்டிகள் எண்ணிக்கை மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகமும் பெரிய அளவில் அதிகரிக்கும். இதேவேளையில் புதிதாக வாய்காம்18 மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் வந்துள்ளதால் பிசிசிஐ-க்கு பெரிய அளவிலான வருமானம் கிடைக்கும்.

ஐபிஎல் பெஸ்ட்

ஐபிஎல் பெஸ்ட்

இந்தியாவில் லாபகரமான ஒரு விளையாட்டுப் போட்டிகள் என்றால் அது ஐபிஎல் தான், கபடி, ஹாக்கி, புட்பால் எனப் பல உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் இருந்தாலும் ஐபிஎல் போல் அதிகளவில் லாபம் அளிக்கும் விளையாட்டு எதுவும் இல்லை என்பது தான் உண்மை.

5 வருட ஐபிஎல் ஒப்பந்தம் விலை

5 வருட ஐபிஎல் ஒப்பந்தம் விலை

பிசிசிஐ இந்த முறை 5 வருடத்திற்கான ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ஏலம் விட உள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளில் ஸ்டார் நெட்வொர்க் பெற்று உள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ள 5,200 முதல் 5,300 கோடி ரூபாய் வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த 5 வருட ஐபிஎல் ஒப்பந்தம் விலை 24,000 கோடி ரூபாயில் இருந்து 40,000 கோடி ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட உள்ளது.

அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் மற்றும் எண்டர்டெயின்மென்ட் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமேசான் உலகின் பல நாடுகளில் விளையாட்டுப் பிரிவு ஒளிபரப்பு துறையிலும் முதலீடு செய்து வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

ரிலையன்ஸ் - அமேசான்

ரிலையன்ஸ் - அமேசான்

இந்நிலையில் அமேசான் இந்தியாவில் அனைத்து பிரிவுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில் ஐபிஎல் முக்கிய இலக்காக வைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் இறங்கும் நிலையில் கட்டாயம் அமேசான் அதிரடி காட்டும்.

முகேஷ் அம்பானி-யின் வாய்காம் 18

முகேஷ் அம்பானி-யின் வாய்காம் 18

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எண்டர்டெயின்மென்ட் பிரிவான வாய்காம் 18 ஏற்கனவே புட்பால், டென்னிஸ் எனப் பல விளையாட்டுப் போட்டிகளின் இந்திய ஒளிபரப்பு வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில் முகேஷ் அம்பானிக்கு ஐபிஎல் தற்போது முக்கிய இலக்காக மாறியுள்ளது.

யாருக்குக் கிடைக்கும்..?

யாருக்குக் கிடைக்கும்..?

இதனால் அடுத்த 5 வருட ஐபிஎல் போட்டிகள் யாருக்கு என்பதைத் தாண்டி, எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் பெற வாய்காம் 18 , அமேசான் மத்தியில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்டார் நெட்வொர்க் இதற்கு ஈடுகொடுக்குமா என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BCCI to Auction 5yr IPL media Rights: RIL Viacom18, Amazon fights to get Rs.40,000 cr Deal

BCCI to Auction 5yr IPL media Rights: RIL Viacom18, Amazon fights to get Rs.40,000 cr Deal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X