பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 300 சதவீதம் அதிகரித்து, 1,134 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கடந்த ஆண்டில் 763 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சிஎன்பிசி கணிப்பில் 710 கோடி ரூபாயாக லாபம் அதிகரிக்கலாம் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலாண்டு அறிக்கையானது சந்தை முடிவுக்கு பின்பு வந்ததால் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை.
ஷிபா இனு: 9 மாதத்தில் 8,00,000% உயர்வு.. வியக்கவைக்கும் லாபம்..!

செயல்பாட்டு வருவாய்
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5.4% அதிகரித்து, 28,326 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 26,853 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 13% அதிகரித்து, 25,060 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எபிடா விகிதம்
இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த எபிடா விகிதம் செப்டம்பர் காலாண்டில் 14,018 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் எபிடா மார்ஜின் 49.5% அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் அர்பு விகிதம் செப்டம்பர் காலாண்டில் 153 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 143 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் வளர்ச்சி
மொபைல் சேவைகள் மூலமாக வருவாய் விகிதம் 20.3% அதிகரித்து, 15,191 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 4ஜி வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அர்பு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வருவாய் விகிதமானது அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிரிக்கா வணிகத்தில் மொபைல் சேவை வருவாய் விகிதம் 8,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சிறந்த எதிர்காலம்
வயர்லெஸ் வணிகத்தில் நாங்கள் கண்ட வலுவான வளர்ச்சிக்கு மத்தியில், இதுவும் அர்பு விகிதம் காரணமாக அமைந்துள்ளது. மேலும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, டேட்டா செண்டர்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை இன்னும் உருவாகி வருகின்றன. எதிர்காலத்தில் 5ஜி சேவையானது வலுவான வளர்ச்சியினை காணலாம் என்ற நிலையில், இதன் வருவாய் வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.