அள்ளிக் கொடுக்கும் ஏர்டெல்..! உலகிலேயே மூன்றாவது நிறுவனம் என சாதனை..! எதில் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் வானத்தில் இப்போது தான் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் ஒளிரத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இந்திய டெலிகாம் துறையில் ஒரே ரத்தக் களரி தான்.

யாரைப் பார்த்தாலும் சலுகை, எதற்கு எடுத்தாலும் சலுகை, மலிவு விலை என்றால் அப்படி ஒரு மலிவு விலை. 1 ஜிபி டேட்டாவுக்கு சுமார் 150 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய்... 2 எலுமிச்சை 10 ரூபாய் கணக்காக, ஒரு ஜிபி டேட்டாவுக்கு வெறும் 5 ரூபாய் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதில் வாய்ஸ் கால் சேவைகள் முழுமையாக இலவசம் வேறு. அது போக வாடிக்கையாளர்களைக் கவர அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சேவைகள் இலவசம் என லோல் பட்டுப் போனது இந்திய டெலிகாம் துறை.

மாபெரும் நஷ்டம்
 

மாபெரும் நஷ்டம்

இப்படி அள்ளி இறைத்தது + உச்ச நீதிமன்றத்தின் லைசென்ஸ் தொகை தீர்ப்பினால், கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில், ஏர்டெல் நிறுவனம் மட்டும் சுமார் 23,000 கோடி ரூபாயை காலாண்டு நஷ்டமாக கணக்கு காட்டி கண்ணீர் வடித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஏர்டெல் லைசென்ஸ் கட்டணமாக சுமார் 28,000 கோடி ரூபாயை அரசுக்கு கொடுக்க வேண்டி இருந்தது.

கதறல்

கதறல்

இப்படி ஏர்டெல் மட்டுமல்ல, வொடாபோன் ஐடியா நிறுவனமும் கொடூர நஷ்டத்தைப் பதிவு செய்தார்கள். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தப்பிப் பிழைத்தது. இப்படியே போனால் வொடாபோன் ஐடியா கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு கிளம்பிவிடுவோம் என வொடாபோன் ஐடியாவின் தலைவர் குமார மங்களம் பிர்லா வெளிப்படையாகச் சொன்னார்.

ஒரு அதிரடி

ஒரு அதிரடி

அதன் பின் தான் எல்லா டெலிகாம் நிறுவனங்களும் (ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஜியோ) ஒன்று கூடி, "மாப்ள நாம போட்டி போட்டது இருக்கட்டும், இனி வியாபாரத்த பாத்து பிழைக்கிற வழிய பாப்போம்" என்கிற கணக்காக விலையை ஏற்ற இருப்பதாகச் சொன்னார்கள். சொல்லிய சில வாரங்களிலேயே விலையையும் சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரித்துவிட்டார்கள்.

வருமானம்
 

வருமானம்

இந்த விலை ஏற்றத்தால், அடுத்த நிதி ஆண்டில், இந்திய டெலிகாம் நிறுவனங்களின் வருமானம், இரண்டு மடங்கு அதிகரிக்கும் என, க்ரிசில் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களே சொல்லிவிட்டது. ஆக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேப்பில் ஏர்டெல் ஒரு நல்ல விஷயத்துக்காக உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

லாபம் கொடுத்த நிறுவனம்

லாபம் கொடுத்த நிறுவனம்

ஏர்டெல் தன்னளவில் வருவாய் சரிவு, நிகர நஷ்டம், செயல்பாட்டு லாபம் சரிவு போன்ற பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏர்டெல் பங்கை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்களை, ஏர்டெல் ஏமாற்றவில்லை. குறிப்பாக 2019-ம் ஆண்டில் ஏமாற்றவில்லை. அதனால் தான் உலக சாதனைக்கு இணையாக பேசப்படுகிறது.

உலகில் எத்தனை பேர்

உலகில் எத்தனை பேர்

2019-ம் ஆண்டில், உலகிலேயே நல்ல விலை ஏற்றம் கண்டு கொண்டிருக்கும் டெலிகாம் நிறுவன பங்குகள் பட்டியலில், ஏர்டெல் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்காவின் உபிக்விட்டி இன்க் (Ubiquiti Inc) நிறுவன பங்கு இருக்கிறது. இந்த 2019-ம் ஆண்டில் உபிக்விட்டி பங்குகள் சுமார் 93 % விலை அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் சொல்கிறது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

இரண்டாவது இடத்தில் சீனாவின் இசட் டி இ (ZTE) என்கிற டெலிகாம் நிறுவன பங்கு இருக்கிறது. இந்த இசட் டி இ நிறுவனம் 2019-ம் ஆண்டில் இது வரை 63.76 % விலை அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் சொல்கிறது. சீனர்களும், சீன நிறுவனங்களும் இல்லாத இடமே இல்லை போலிருக்கிறதே.

நம் ஏர்டெல்

நம் ஏர்டெல்

சீன நிறுவனத்தைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் நம் பார்தி ஏர்டெல் நிறுவன பங்கு இடம் பிடித்து இருக்கிறது. இந்த 2019-ம் ஆண்டில், பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள், சுமாராக 55 % விலை அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் தரவுகள் சொல்லி இருக்கிறது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

நான்காவது இடத்தில் ஜப்பானின் Hikari Tsushin (54 %) நிறுவன பங்கும், ஐந்தாவது இடத்தில் Foxconn (53 %) நிறுவன பங்கும் இடம் பிடித்து இருக்கின்றன. இந்த 2019-ம் ஆண்டில், உலக அளவில், சராசரியாக, டெலிகாம் நிறுவன பங்குகளின் விலை, 6.7 % தான் அதிகரித்து இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் சொல்லி இருக்கிறது.

டிராய்

டிராய்

சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையில், இந்திய டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் 17 காலாண்டுக்குப் பிறகு, இந்த ஜூன் 19-ல் தான் மேம்பட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆக இப்போது விலை ஏற்றத்தின் பின் இன்னும் நல்ல வருவாய் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏர்டெல் வருவாய்

ஏர்டெல் வருவாய்

சமீபத்தில் விலை ஏற்றத்துக்குப் பின், ஒரு பயனாளரிடம் இருந்து வரும் வருவாய் (ARPU - Average Revenue Per User) பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு நன்றாக அதிகரிக்க இருக்கிறதாம். ஏர்டெல் நிறுவனத்தின் ஏ ஆர் பி யூ 2020 - 21 நிதி ஆண்டில் 176 ரூபாயாகவும், 2021 - 22 நிதி ஆண்டில் 189 ரூபாயாகவும் 2022 - 23 நிதி ஆண்டில் 196 ரூபாயாகவும் இருக்கும் எனக் கணித்து இருக்கிறது EMkay என்கிற அமைப்பு.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஆக இத்தனை நாட்களாக, கதறலை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த ஏர்டெல், இப்போது உலக டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரத் தொடங்கி இருக்கிறது. வியாபார வளர்ச்சியில் ஓவராக விலையை வைத்து எங்களை தாளித்து விடாதீர்கள் பாஸ். மேலும் வளர்ச்சி காண எங்கள் வாழ்த்துக்கள் ஏர்டெல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel listed as world third best telecom stock in 2019

The Sunil mittal managing Bharti Airtel listed as the world third best telecom stock in 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more