ஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சியில், அமெரிக்கா சீனா மீது மனித உரிமை மீறல், கொரோனா குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை எனப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.

 

இதோடு இரு நாடுகள் மத்தியிலான வரி விதிப்பு மற்றும் வர்த்தகத் தடைகள் ஆகியவை அமெரிக்கா - சீனா இடையிலான நட்புறவைப் பெருமளவில் பாதித்தது.

இந்நிலையில் ஜோ பிடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்த நிலையில், ஜோ பிடன் ஆட்சியில் சீனா மீது கடுமையான பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் இதனால் சீன பொருளாதாரம் அடுத்த ஆண்டுப் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன்

டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன்

சீனா விவகாரத்தில் டிரம்ப்-ன் கடுமையான நடவடிக்கைகள் ஜோ பிடன் ஆட்சி காலத்திலும் தொடரும் என்றும், 2024ல் மீண்டும் டிரம்ப் ஆட்சியைப் பிடிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் சீன மத்திய வங்கியின் முன்னாள் ஆலோசகர் மற்றும் சீனாவின் மாபெரும் பல்கலைக்கழகமாக விளங்கும் Tsinghua Universityயின் பேராசிரியரான David Li Daokui தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

ஜோ பிடன் சீனாவின் குறிப்பிட்ட துறைகளைக் குறிவைத்து கட்டுப்பாடுகளை விதிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சீனாவின் தொழிற்துறை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் அடுத்த ஆண்டுச் சீன பொருளாதாரம் பல விதமான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என David Li Daokui தெரிவித்துள்ளார்.

சீன பொருளாதாரம்
 

சீன பொருளாதாரம்

இதுமட்டும் அல்லாமல் அடுத்த ஆண்டுச் சீனாவின் வெளியுறவு கொள்கை மூலம் பல தொழிற்துறை மற்றும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா

இந்தியா

இதேபோல் மறுமுனையில் ஜோ பிடன் வெற்றி இந்தியாவில் பல நல்ல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதலீட்டுச் சந்தை, விசா கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்த கணிப்புகள், அமெரிக்கா - இந்தியா இடையிலான நட்புறவு, அமெரிக்கா - இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு மேம்பாடு என அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு நன்மைகள் உண்டு எனக் கருத்து நிலவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Biden may impose more sanctions on china: Chinese economy at risk

Biden may impose more sanctions on china: Chinese economy at risk
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X