டிரம்ப் விதித்த ஹெச்1பி கட்டுப்பாடுகள் ரத்து.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருக்கும் போது ஹெச்1பி விசா மூலம் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளையும் தடைகளை விதித்தார்.

 

இந்தக் கட்டுப்பாடு காரணமாகப் பல இந்தியர்கள் அமெரிக்கா செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தவித்தனர். அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பல இந்திய நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தும் சூழ்நிலை உருவானது.

இந்தக் கஷ்டங்களை எல்லாம் தீர்க்கும் வகையில் ஜோ பைடன் அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐடி ஊழியர்களுக்குக் குட்நியூஸ்.. ஹெச்1பி விசா மீதான தடை நீங்கியது..! இனி ஜாலி தான்..!

 டிரம்ப் அரசின் கட்டுப்பாடு

டிரம்ப் அரசின் கட்டுப்பாடு

டிரம்ப் ஆட்சியில் இருக்கும் போது ‘speciality occupation' என்ற அடிப்படையில் ஹெச்1பி விசா வழங்குவதிலும், அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த அக்டோபர் 2020ல் ஒருமுக்கியமான சட்டத்தைத் தீட்டினார்.

 இடைக்காலச் சட்டம்

இடைக்காலச் சட்டம்

இந்த இடைக்காலச் சட்டத்தின் மூலம் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதில் பெரிய அளவிலான தடைகளை எதிர்கொண்டனர், இந்நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த உடனே ஹோம்லேண்டு செக்கியூரிட்டி அமைப்பு மூலம் இந்தத் தடை உத்தரவை நீக்கினார்

 செவ்வாய்க்கிழமை உத்தரவு

செவ்வாய்க்கிழமை உத்தரவு

இதன் வாயிலாகச் செவ்வாய்க்கிழமை மாலையில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை அமைப்பு டிரம்ப் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட interim final rule (IFR)-ஐ முழுமையாக ரத்து செய்து, பெடரல் நீதிமன்றத்தில் சட்ட அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

 அமெரிக்க வேலைவாய்ப்புத் துறை
 

அமெரிக்க வேலைவாய்ப்புத் துறை

டிரம்ப் அறிவித்த கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்க வேலைவாய்ப்புத் துறையில் ‘third-party worksite', ‘employer-employee relationship' மற்றும் ‘specialty occupation' ஆகியவற்றுக்கான விளக்கத்தை மாற்ற நினைத்தது. இதை மாற்றினால் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் பணியாற்றுவது மிகவும் கடினமாக மாறிவிடும்.

 பெடரல் நீதிமன்றம்

பெடரல் நீதிமன்றம்

தற்போது பெடரல் நீதிமன்றத்தில் சட்ட அறிக்கையாக வெளியிடப்பட்டு உள்ள ரத்து அறிக்கையில் டிரம்ப் விதித்த கல்வி அடிப்படையிலான ஹெச்1பி விசா அளிக்கும் முறையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 பைடன் அரசு அதிரடி

பைடன் அரசு அதிரடி

ஏற்கனவே பைடன் அரசு, டிரம்ப் விதித்த சம்பளம் அடிப்படையிலான ஹெச்1பி விசா அளிக்கும் முறையை ரத்து செய்துள்ள நிலையில் தற்போது கல்வி அடிப்படையிலான விசா அளிக்கும் முறையும், ஹெச்1பி விசா உடன் அமெரிக்கா வருவோரின் எண்ணிக்கை கட்டுப்பாடும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 இந்தியர்கள் கொண்டாட்டம்

இந்தியர்கள் கொண்டாட்டம்

இதன் மூலம் ஹெச்1பி விசா மீது டிரம்ப் அரசு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மேலும் இனி இந்தியர்கள் எவ்விதமான தடையும் இல்லாமல் தகுதி, திறன் உள்ள அனைவரும் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big relief for Indian IT workers: Under Joe biden Govt, US Court removes strict H-1B norms

Big relief for Indian IT workers: Under Joe biden Govt US Court removes strict H-1B norms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X