சீனாவுக்கு 'நோ'.. டாடா, ரிலையன்ஸ்-க்கு அடித்த ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் மத்தியில் உருவாக்கியுள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் பல நாடுகள் தங்களின் வாய்ப்புகளை இழந்து வருகிறது. ஆனால் மறுபுறம் இந்த வாய்ப்பு பிற நாடுகளுக்குச் செல்வதால் பலருக்கு இது ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

உதாரணமாகக் கடந்த 2 வருடங்களில் சீனாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்களில் பெருமளவு வியட்நாம் நாட்டிற்குச் சென்றுள்ளது. இதனால் எதிரொலியாக வியட்நாம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 இல் 8.02 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இது 1997 முதல் பதிவான வருடாந்திர வளர்ச்சியில் மிகப்பெரிய அளவாகும். கிட்டதட்ட இதேபோன்ற வாய்ப்பு இந்தியாவுக்கும் தற்போது வந்துள்ளது.

அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு.. மக்கள் மத்தியில் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்தலாம்? அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு.. மக்கள் மத்தியில் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்தலாம்?

சீனா

சீனா

உலகளவில் சீன நிறுவனம் மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் டெலிகாம் கருவிகளுக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருக்கும் நிலையில், இப்பிரிவில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. சீன டெலிகாம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் எரிக்சன் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

5ஜி கருவிகள்

5ஜி கருவிகள்

இதேவேளையில் சர்வதேச சந்தையின் தேவையைத் தீர்க்க எரிக்சன் போன்ற சில நிறுவனங்களால் மட்டுமே முடியாது என்பதால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5ஜி கருவிகளுக்கு உலகச் சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

டெலிகாம் துறை

டெலிகாம் துறை

டெலிகாம் துறையில் தற்போது யார் யாரை முந்தப் போகிறது என்பது தான் பெரும் போட்டியாக இருந்த நிலையில் சீனாவுக்கு உலகமே செக் வைத்திருக்கும் நிலையில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இப்பயணத்தில் கிடைத்துள்ளது.

டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ

டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ

டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தற்போது சர்வதேச சந்தைக்கான 5ஜி டெலிகாம் கருவிகள் சப்ளையர்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் கூறியுள்ளார்.

AJ பால்ராஜ்

AJ பால்ராஜ்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் எமரிட்டஸ், AJ பால்ராஜ் நாம் இந்தியாவில் ஏதாவது ஒன்றை (5G உபகரணங்களை) உருவாக்க வேண்டும். டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட 4ஜி கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் BSNL (பாரத் சஞ்சார் நிகாம்) இல் முதல் வெற்றியை அடையப்போகிறது என்று நான் நினைக்கிறேன். இதேபோல் ஜியோவும் உள்நாட்டு டெலிகாம் தொழில்நுட்பத்தைப் பற்றி உருவாக்கிக்கொண்டு வருகிறது எனப் பால்ராஜ் கூறினார்.

அமெரிக்கா உதவி

அமெரிக்கா உதவி

சீன டெலிகாம் கருவிகள் மீதான தடை மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட தொழில்நுட்ப பின்னடைவு காரணமாக, டெலிகாம் கருவிகள் உற்பத்தி செய்யும் பணிகளை வேகப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா உதவக்கூடும் எனவும் பேராசிரியர் AJ பால்ராஜ்.

MIMO தொழில்நுட்பம்

MIMO தொழில்நுட்பம்

பேராசிரியர் AJ பால்ராஜ் இன்று நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் Wi-Fi, 4G மற்றும் 5G வயர்லெஸ் நெட்வொர்க்குகளில் முக்கியப் பங்கு வகிக்கும் மல்டிபிள் இன்புட் மல்டிபிள்-அவுட்புட் (MIMO) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்.

5ஜி பாதை

5ஜி பாதை

2017 இல் இந்தியாவின் 5ஜி பாதையல் பணியாற்றுவதற்கும் ஸ்பெக்ட்ரம் தேவைகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அமைக்கப்பட்ட உயர்மட்ட மன்றத்திற்குப் பேராசிரியர் AJ பால்ராஜ் தலைமை தாங்கினார்.

BSNL நிறுவனம்

BSNL நிறுவனம்

BSNL நிறுவனம் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.16000 கோடி ரூபாய் மதிப்பிலான இக்கூட்டணி திட்டத்தில் டாடா குழுமம் இந்தியாவில் முதல் முறையாகச் சொந்தமாக டெலிகாம் நெட்வொர்க் சொல்யூஷன்களை வழங்க உள்ளது.

டிசிஎஸ் முயற்சி

டிசிஎஸ் முயற்சி

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய டிசிஎஸ் மற்றும் அரசு அமைப்பான C-DOT உடன் இணைந்து 4ஜி தொழில்நுட்பத்தையும், டிசிஎஸ் - அரசு அமைப்பான ITI உடன் இணைந்து 4ஜி நெட்வொர்க்கிற்குத் தேவையான டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Setback for China; jackpot Ambani, Tata telecom products to global stage

Big Setback for China; jackpot Ambani, Tata telecom products to global stage
Story first published: Monday, January 2, 2023, 20:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X