புதிய பெயரில் வரும் பப்ஜி-ஐ தடை பண்ணுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல தடைகளைத் தாண்டி, குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சி இப்போ தான் பப்ஜி கேம்-ஐ தயாரித்த தென் கொரிய நிறுவனமான KRAFTON சீன நிறுவனமான டென்சென்ட் உடனான ஒப்பந்தம் எல்லாம் சரிக்கட்டி இந்தியாவில் புதிய பெயரில் பப்ஜி கேம்-ஐ வருகிற ஜூன் 16ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது.

 

இந்திய அரசு 200க்கும் அதிகமாகச் சீன செயலிகளைத் தடை செய்த போது அதில் பப்ஜி கேம்-ம் தடை செய்யப்பட்டது. கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பின் இந்தியாவில் மீண்டும் பல மாற்றங்களுடன் அறிமுகம் செய்து பப்ஜி கேமிங் செயலியை பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா என்ற பெயரில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது.

உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. !

இந்நிலையில் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலிக்குத் தடை விதிக்க எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் எம்எல்ஏ

அருணாச்சல பிரதேசம் எம்எல்ஏ

அருணாச்சல பிரதேசத்தின் எம்எல்ஏ-வான Ninong Ering இந்தியாவில் மீண்டும் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா பெயரில் வரும் பப்ஜி கேம் செயலியை தடை செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலி

பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலி

இதுமட்டும் அல்லாமல் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலியின் புதிய அவதார் இந்திய அரசையும், இந்திய மக்களையும் கிண்டல் செய்யும் வகையில் ரெக்கான் மாஸ் மற்றும் சூட் அறிமுகம் செய்துள்ளதாக இந்தக் கடிதத்தில் Ninong Ering தெரிவித்துள்ளார்.

தென் கொரிய நிறுவனம் KRAFTON

தென் கொரிய நிறுவனம் KRAFTON

இதோடு KRAFTON தென் கொரிய நிறுவனமாக இருந்தாலும், KRAFTON இந்தியா அலுவலகத்தில் டென்சென்ட் நிறுவனத்தின் பல ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும். கூகிள் ப்ளே-வில் இருக்கும் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா-வின் PUBG Mobile பெயர் இடம் பெற்றுள்ளது.

சீனாவின் டென்சென்ட்
 

சீனாவின் டென்சென்ட்

மேலும் சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் சிங்வி பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலி இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் சீனாவின் டென்சென்ட் மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழைகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ஜூன் 16ஆம் தேதி பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலி அறிமுகம் செயல்படுகிறது எனக் கூறப்பட்டாலும் KRAFTON இந்தியா அறிமுகம் செய்யப்படும் நாள்-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மோடியின் முடிவு என்ன..?

மோடியின் முடிவு என்ன..?

இந்நிலையில் இந்தச் செயலியைத் தடை செய்ய அருணாச்சல பிரதேசத்தின் எம்எல்ஏ-வான Ninong Ering-ன் கடிதம் மோடிக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில் பிரதமர் இதுகுறித்து என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big trouble for Battlegrounds Mobile India (Pubg) might get banned: Letter to PM Modi

Big trouble for Battlegrounds Mobile India (Pubg) might get banned: Letter to PM Modi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X