80 காண்டம் ஆர்டர் செய்த ஆசாமி.. சோமேட்டோ, ஸ்விக்கி-யின் உச்சகட்ட புத்தாண்டு வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

 

இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருந்த காரணத்தால் இரவு நேரம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்க துவங்கினர்.

1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!

 ஆன்லைன் சேவை

ஆன்லைன் சேவை

அனைத்து ஆன்லைன் சேவை தளத்திலும் நேற்று அதிகமான வர்த்தகத்தைப் பதிவு செய்யப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மிகவும் முக்கியமான உணவை மக்கள் அதிகளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த காரணத்தால் வரலாறு காணாத வர்த்தகத்தைச் சோமேட்டோ, ஸ்விக்கி பெற்றுள்ளது.

 UPI பேமெண்ட் தளம்

UPI பேமெண்ட் தளம்

இதேபோல் நேற்று UPI பேமெண்ட் தளமும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஓரே நேரத்தில் பயன்படுத்திய காரணத்தால் சில மணிநேரம் யூபிஐ தளமும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டிஜிட்டல் வர்த்தகத்தைத் தாண்டி டிஜிட்டல் பேமெண்ட் தளமும் பெரிய அளவில் மக்கள் நேற்று பயன்படுத்தியுள்ளனர்.

 சோமேட்டோ ஸ்விக்கி
 

சோமேட்டோ ஸ்விக்கி

ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சோமேட்டோ ஸ்விக்கி தளத்தில் அதிகப்படியான ஆர்டர்கள் குவியும், இது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புத்தாண்டு பொதுவானது என்பதாலும், லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாலும் எப்போதும் இல்லாத வகையில் உணவுக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளது.

 9,049 ஆர்டர்கள்

9,049 ஆர்டர்கள்

ஸ்விக்கி தளத்தில் கடந்த ஆண்டு இதே புத்தாண்டின் போது ஒரு நிமிடத்திற்கு அதிகப்படியாக 5500 டாலர் குவிந்துள்ளது, ஆனால் நேற்று ஒரு நிமிடத்திற்கு அதிகப்படியாக 9,049 ஆர்டர்கள் குவிந்துள்ளது. இது வரலாற்று உச்சம் என ஸ்விக்கி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் சோமேட்டோ நிறுவனம் அதிகப்படியாக நேற்று ஒரு நிமிடத்திற்கு 7,100 ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

 ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி நிறுவனத்தில் அதிகளவிலான ஆர்டர்கள் குவிய மிக முக்கியமான காரணம் ஸ்விக்கி தளத்தில் தற்போது மளிகை பொருட்கள் உட்படப் பல பொருட்கள் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது தான்.

 2.5 மில்லியன் ஆர்டர்

2.5 மில்லியன் ஆர்டர்

மேலும் இதுபோன்ற பண்டிகை காலத்தில் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி தளத்தில் 1.5 மில்லியன் ஆர்டர்கள் குவியும் ஆனால் இந்த ஆண்டுப் புத்தாண்டில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

 12 லட்சம் வாடிக்கையாளர்

12 லட்சம் வாடிக்கையாளர்

இதுமட்டும் அல்லாமல் சோமேட்டோ தளத்தில் 30 நிமிட இடைவேளையில் சுமார் 12 லட்சம் பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தியுள்ளதாகவும், நேற்று சாரசரியாகச் சோமேட்டோ தளத்தில் ஒரு நொடிக்கு ஒரு கேக் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.

 80 காண்டம் ஆர்டர்

80 காண்டம் ஆர்டர்

மேலும் நேற்று உணவுப் பொருட்களைத் தாண்டி சோமேட்டோ-வின் Blinkit தளத்தில் 1,30,154 லிட்டர் சோடா, 11,943 ஐஸ்பேக், 4,884 நாசோ சிப்ஸ், 6712 ஐஸ்கிரீம், 28,240 இன்ஸ்டென்ட் பாப்கார்ன், 33,440 காண்டம் இதில் ஒருவர் மட்டும் 80 காண்டம் ஆர்டர் செய்துள்ளார் எனச் சோமேட்டோ நிறுவனர் தீபேந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Biggest New Year's Eve for Swiggy, zomato nearly 2.5 million orders a day

Biggest New Year's Eve for Swiggy, zomato nearly 2.5 million orders a day 80 காண்டம் ஆர்டர் செய்த ஆசாமி.. சோமேட்டோ, ஸ்விக்கி-யின் உச்சகட்ட புத்தாண்டு வர்த்தகம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X