எலான் மஸ்க்-கிற்கு குழிபறிக்கும் பில் கேட்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் மற்றும் பில் கேட்ஸ் இருவரும் கடந்த சில மாதங்களாகவே எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர்.

 

இருவருக்குமான பிரச்சனை எங்குத் துவங்கியது என்றால் பில் கேட்ஸ், எலான் மஸ்க் ஒரு முக்கியமான நன்கொடை திட்டத்திற்கு அழைத்தார், அதற்கு நேரடியாக மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பில் கேட்ஸ், எலான் மஸ்க்-ஐ டெஸ்லா பங்குகளை ஷார்ட்டிங் செய்கிறார் என்று குற்றம்சாட்டினார்,

இதைத் தொடர்ந்து பில் கேட்ஸ் எலான் மஸ்க்-ஐ வீழ்த்த பல நூறு மில்லியன் டாலர் முதலீடு செய்து மிகப்பெரிய குழி பறித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்த நிலையில்...

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

எலான் மஸ்க் டிவிட்டரில் பில் கேட்ஸ்-ஐ பகிரங்கமாகத் திட்டியுள்ளார். என்ன நடந்தது..? பில் கேட்ஸ் என்ன செய்தார்..?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளதாக அறிவித்த நாளில் இருந்து, டிவிட்டர் மூலம் மக்களுக்குச் சுதந்திர பேச்சு உரிமை அளிக்கப்போவதாக அறிவித்து வந்த நிலையில், இந்தக் கொள்கைக்கு எதிர்க்க ஒரு கூட்டம் உருவானது. அந்தக் கூட்டம் உருவாக முக்கியக் காரணம் பில் கேட்ஸ்.

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் தளத்தில் எலான் மஸ் கொள்கைகளை மாற்றி Free Speech அறிமுகம் செய்தால் டிவிட்டர் நிறுவனத்தில் விளம்பரம் செய்பவர்கள் வெளியேற வேண்டும் என 26 அமைப்புகள் பெட்டிஷனில் கையெழுத்திட்டது.

26 அமைப்புகள்
 

26 அமைப்புகள்

இந்த 26 அமைப்புகள் (NGO) யார் என்ற உண்மையை வெளியிட வேண்டும் என எலான் மஸ்க் தனது 94 மில்லியன் பாலோவர்களிடம் கேட்டுக்கொண்டார். இதன் வாயிலாக இந்த 26 அமைப்புகளுக்குப் பண உதவி செய்வது யார் என்பதை Foundation for Freedom Online (FFO) வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் ப்ரீட்பார்ட் நியூஸ் ஆய்வு செய்தது.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்

இந்த 26 அமைப்பில் 11 அமைப்புகளுக்குப் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் கிழ் இயங்கும் சிறு சிறு அமைப்புகள் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பெட்டிஷனில் கையெழுத்திட்ட 11 நிறுவனங்களுக்கு முதலீடு செய்து பில் கேட்ஸ் வளர்த்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

457 மில்லியன் டாலர்

457 மில்லியன் டாலர்

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் சுமார் 457 மில்லியன் டாலர் தொகையை 102 பணப் பரிமாற்றத்தில் New Venture Fund நிறுவனத்திற்கு நன்கொடை அளித்துள்ளது. இதேபோல் டைட்ஸ் பவுண்டேஷன், Empowering Pacific Islanders Community (EPIC) மற்றும் Reproaction ஆகிய நிறுவனங்களுக்கும் கேட்ஸ் பவுண்டேஷன் பணம் சென்றுள்ளது.

New Venture Fund நிறுவனம்

New Venture Fund நிறுவனம்

இதில் New Venture Fund நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற்ற 4 என்ஜிஓ அமைப்பும், டைட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற்ற 5 என்ஐஓ அமைப்புகளும், EPIC மற்றும் Reproaction ஆகிய 11 அமைப்புகள் எலான் மஸ்கிற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

ப்ரீட்பார்ட் நியூஸ்

ப்ரீட்பார்ட் நியூஸ்

மேலும் இந்த அமைப்புகள் அமெரிக்காவின் Democrat கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதும் ப்ரீட்பார்ட் நியூஸ் ஆய்வுகள் கூறுகிறது. பில் கேட்ஸ் கையில் உலகின் மிகப்பெரிய "philanthropy" network உள்ளது.

 தேர்தல்

தேர்தல்

தற்போது மஸ்க்-கிற்கு நடப்பதை பார்க்கும் போது பில் கேட்ஸ் நன்கொடைகள் மூலம் எய்ட்ஸ், உலகப் பசி மற்றும் நோய் ஒழிப்பிற்ரு மாறாக அதிபர் தேர்தலில் Democrat கட்சி வெற்றிப்பெறுவதற்காகப் பயன்படுகிறது எனத் தெரிகிறது என ப்ரீட்பார்ட் நியூஸ் ஆய்வுகள் கூறுகிறது. தற்போது மஸ்க்-கிற்கு நடப்பதை பார்க்கும் போது பில் கேட்ஸ் நன்கொடைகள் மூலம் எய்ட்ஸ், உலகப் பசி மற்றும் நோய் ஒழிப்பிற்ரு மாறாக அதிபர் தேர்தலில் Democrat கட்சி வெற்றிப்பெறுவதற்காகப் பயன்படுக்கிறது எனத் தெரிகிறது என ப்ரீட்பார்ட் நியூஸ் ஆய்வுகள் கூறுகிறது.

ஜார்ஜ் சொரோஸ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா

ஜார்ஜ் சொரோஸ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றுவதை எதிர்த்தும் விளம்பரதாரர்கள் வெளியேற வேண்டும் எனப் பெட்டிஷனில் கையெழுத்திட்ட 26ல் 11 அமைப்புகள் பில்கேட்ஸ் தொடர்புடையதாக இருக்கும் நிலையில் மற்ற 15 நிறுவனங்கள் கோடீஸ்வரர் நன்கொடையாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரை சார்ந்து உள்ளதாக ட்ரிபியூன் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க் டிவீட்

எலான் மஸ்க் டிவீட்

இந்த ஆய்வுகளைப் பார்த்த எலான் மஸ்க் தனது டிவிட்டரில் D*** Move எனப் பதில் அளித்துள்ளார். இதற்குப் பலர் எலான் மஸ்க்-கிற்கு ஆதரவு தெரிவித்தும், பலர் பில் கேட்ஸ்-க்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

உண்மை என்ன..?

உண்மை என்ன..?

இது வலதுசாரிகள், இடதுசாரிகள் மத்தியில் நடக்கும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் எலான் மஸ்க் இனி republic கட்சிக்கு வாக்கு அளிக்கப் போவதாக வெளிப்படையாக 2022ல் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bill Gates using his philanthropy network and dark money to attack Elon musk

Bill Gates using his philanthropy network and dark money to attack Elon musk எலான் மஸ்க்-கிற்குக் குழிபறிக்கும் பில் கேட்ஸ்.. தேடி தேடி முதலீடு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X