இந்த டைமில் முதலீடு செய்யுங்க.. ரொம்ப நல்ல லாபம் பார்க்கலாம்.. வாரன் பஃபெட் சூப்பர் அட்வைஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தை என்றால் என்ன? என்று தெரியாதவர்களுக்கு கூட, பங்கு சந்தையின் தந்தை என பாசமாக அழைக்கப்படும் வாரன் பஃபெட்டினை தெரிந்திருக்கலாம். அந்தளவுக்கு பங்கு சந்தையில் முதலீடு பிரபலமானவர்.

 

இப்படியொருவர் பங்கு சந்தையினை பற்றி கூறுகின்றார் என்றால், நிச்சயம் அது கவனிக்க வேண்டிய விஷயம் தானே.

90 வயது இளைஞரான மிகப்பெரிய முதலீட்டாளர் வாரன் பஃபெட் பங்கு சந்தையில் முதலீடு செய்வது மட்டும் அல்ல, அதனை கணிப்பதிலும் மிக வல்லவர்.

இது சரியான தருணம்

இது சரியான தருணம்

இவர் பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது பங்கு சந்தையில் செய்யலாம். இது தான் முதலீடு செய்ய சரியான தருணம். ஏனெனில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கும்போது, சந்தைகள் மோசமாக இருக்கும். ஆக அதிகரித்து வரும் பணவீக்கம் சந்தையில் அதிக முதலீட்டினை ஈர்க்கலாம்.

முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை

முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை

ஆக இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்தால், நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் நீங்கள் தொடந்து சந்தையில் முதலீகளை செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் மூலதன முதலீடு கொண்ட எந்தவொரு வணிகமும் பணவீக்கத்தின் போது மோசமான வணிகமாக இருக்கும்.

சந்தை சரிவில் இருக்கும்
 

சந்தை சரிவில் இருக்கும்

இது பொதுவாக சந்தையில் மோசமான வணிகமாக இருக்கும். அதாவது சந்தையில் சரிவில் இருக்கும். ஆக இது முதலீடு செய்ய சரியான தருணம். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய சந்தைகள் மோசமான சரிவினைக் கண்டது. இந்த நிலையில் பல முதலீட்டாளர்களும் தொடர்ந்து பெரியளவிலான முதலீடுகளை செய்து லாபம் பார்த்தனர் எனலாம்.

முதலீடு செய்ய சரியான இடம்

முதலீடு செய்ய சரியான இடம்

சொல்லப்போனால் கடந்த ஆண்டு மார்ச் மாத சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. பல நிறுவனங்களின் பங்கு விலையும் பல மடங்கு ஏற்றம் கண்டுள்ளது. மொத்தத்தில் இது சந்தையில் முதலீடு செய்ய சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் பணவீக்கம்

அதிகரிக்கும் பணவீக்கம்

தற்போது அமெரிக்காவில் சில்லறை பணவீக்கமானது வியத்தகு முன்னேற்றத்தினை பதிவு செய்துள்லது. நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஜூலை மாதத்தில் 5.4% வீழ்ச்சியினை பதிவு செய்தது. கடந்த 2008ம் ஆண்டில் உலகளாவிய மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போது மீண்டும் நுகர்வோர் விலை குறையீடு மிக மோசமாக ஏற்றம் கண்டுள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீடு

ரியல் எஸ்டேட் முதலீடு


பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரான வாரன் பாஃபெட், பயன்பாடுகள் மற்றும் இரயில் பாதைகள் உள்ளிட்ட வணிகங்கள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனால் அவை லாபகரமானவை அல்ல. ஆக அதிக பணவீக்க காலத்தின் போது ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.

குறைந்த இன்டெக்ஸ்களில் முதலீடு செய்யலாம்

குறைந்த இன்டெக்ஸ்களில் முதலீடு செய்யலாம்

ஏனெனில் அது ஒரு முறை முதலீடாகும். ஆக மறுவிற்பனை செய்யும்போது கூடுதல் நன்மை உண்டு. ஆக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள் என பில்லியனர் முதலீட்டாளார் கூறுகின்றார். மேலும் பணவீக்கத்தின் போது சந்தைகள் சரிவில் இருக்கும். இதனால் குறைந்த இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

 உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்

உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்

அதே போல சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு எப்படி அறிவு பணம் தேவையோ? அதே போல உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். பேராசையுடன் சந்தையை அணுகும்போது சந்தையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். மற்றவர்கள் வெளியேறி வேறு வாய்ப்புகளை தேடும்போது நாம் சந்தையில் நுழைய வேண்டும்.

முதலீட்டாளர்கள் பேராசை

முதலீட்டாளர்கள் பேராசை

எல்லோரும் பேராசைப்படும் போது கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் பயப்படும்போது பேராசைப் பட வேண்டும்.( Be Fearful When Others Are Greedy and Greedy When Others Are Fearful) என்பது பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் வரிகள். இதன் அர்த்தம் எல்லோரும் பேராசைப்படும் போது, எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரும் பங்குகளை வாங்குவார்கள்.

குறுகிய காலத்தில் லாபம்

குறுகிய காலத்தில் லாபம்

ஒரு பங்கை அதற்கு உரிய விலையை விட மிக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஏனெனில் பங்கின் விலை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் தங்களின் முதலீட்டை குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என பேராசை. எனவே, அந்த குறிப்பிட்ட பங்கு உயர்ந்து கொண்டே போகும் என்ற ஆசையில், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என எதை பற்றியும் கவலைப் படாமல் வாங்கி விடுவார்கள்.

யூகத்தின் போது சரியலாம்

யூகத்தின் போது சரியலாம்

உதாரணத்திற்கு ஒரு நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், அதில் நடப்பில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமோ? அப்படி வந்தால் சந்தை மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்ற யூகத்தினால் பங்குகள் விலை அதிகரிக்கும் என அனைவரும் வாங்குவார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த டேட்டா சந்தைக்கு எதிர்மாறாக வந்தால், பங்குகள் சந்தையில் மடமடவென சரிய ஆரம்பித்து விடும்.
அந்த நேரத்தில் அப்படி தேவையற்ற பயத்தினால், விலை மள மளவென சரியும் நேரம், நல்ல பங்குகளும் அந்த நேரத்தில் சரியலாம்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

இந்த இடத்தில் நிறுவனத்தின் மோசமான செயல்பாடு காரணமாக விலை சரியவில்லை, வேறு காரணங்களால் விலை வீழ்ச்சி கண்டது. இது ஒரு தற்போதைய நிகழ்வு. இதிலிருந்து பங்கின் விலை கண்டிப்பாக மீண்டு வரும், ஏனென்றால், அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் லாப கணக்கு எதிர்பார்த்தபடியே அல்லது அதை விட அதிகமாக இருக்கும் போது பங்கு விலை அதிகரிக்கும். ஆக இந்த வீழ்ச்சி கண்டுள்ள நேரத்தில் பங்கினை வாங்கி நீண்டகால நோக்கில் லாபம் பார்க்கலாம் என்கிறார் வாரன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Billionaire investor warren buffet’s investment advice during inflation

The 90 year Billionaire investor warren Buffett’s investment advice during high inflation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X