முதல் இடத்தை இழந்த முகேஷ் அம்பானி நிறுவனம்.. அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி 2020 லாக்டவுன் காலத்தில் தனது ரீடைல் வர்த்தகத்தை, ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வந்து மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தார்.

 

இதுமட்டும் அல்லாமல் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ஜியோமார்ட் கூட்டணி கடும் போட்டியை அளித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் Deloitte நிறுவனம் வெளியிட்டுள்ள குளோபல் பவர் ஹவுஸ் பட்டியலின் மிக முக்கியப் பிரிவான உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் ரீடைல் நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி நிறுவனம் சரிவை கண்டு உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல்

Deloitte நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி உலகிலேயே வேகமாக வளரும் ரீடைல் நிறுவனங்கள் பிரிவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கடந்த வருடம் முதல் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், 2021 பட்டியலில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

குளோபல் பவர்ஸ் ஆப் ரீடைலிங்

குளோபல் பவர்ஸ் ஆப் ரீடைலிங்

மேலும் குளோபல் பவர்ஸ் ஆப் ரீடைலிங் பெயரில் வெளியிட்டுள்ள 250 ரீடைல் நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் ரிலையன்ஸ் ரீடைல் கடந்த ஆண்டு 56வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் 53வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரீடைல் வர்த்தகம் பாதிப்பு
 

ரீடைல் வர்த்தகம் பாதிப்பு

கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் அறிவிப்பு மூலம் உலகில் பல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற துவங்கினாலும், ஆன்லைன் பிரிவில் அல்லாத பல முன்னணி ரீடைல் நிறுவனங்கள் மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகப் பிரிட்டன் நாட்டின் 3க்கும் அதிகமான ரீடைல் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம்

அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம்

இந்நிலையில் குளோபல் பவர்ஸ் ஆப் ரீடைலிங் பட்டியலில் ஆன்லைன் மற்றும் ரீடைல் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வால்மார்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து அமேசான்.காம், காஸ்ட்கோ ஆகிய நிறுவனங்கள் டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது.

ஜெர்மனி, பிரிட்டன் நிறுவனங்கள்

ஜெர்மனி, பிரிட்டன் நிறுவனங்கள்

மேலும் டாப் 10 ரீடைல் நிறுவனங்கள் பட்டியலில் 7 அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஜெர்மனி Schwarz குரூப் (4வது இடம்), ஜெர்மனி நாட்டின் மற்றொரு ரீடைல் நிறுவனமான Aldi (8வது இடம்), பிரிட்டன் டெஸ்கோ (10வது இடம்) ஆகிய 3 வெளிநாட்டு நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று உள்ளது.

250 ரீடைல் நிறுவனங்கள்

250 ரீடைல் நிறுவனங்கள்

250 ரீடைல் நிறுவனங்கள் அடங்கிய குளோபல் பவர்ஸ் ஆப் ரீடைலிங் பட்டியலில் ஓரே ஒரு இந்திய நிறுவனம் மட்டுமே இடம்பெற்று உள்ளது. அது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தான். வேகமாக வளரும் ரீடைல் நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்திருந்தாலும் மொத்த பட்டியலில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் அதிரடி வளர்ச்சி

ரிலையன்ஸ் ரீடைல் அதிரடி வளர்ச்சி

ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 41.8 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. 2020ஆம் நிதியாண்டில் முடிவில் மட்டும் ரிலையன்ஸ் ரீடைல் எலக்ட்ரானிக்ஸ், பேஷன், லைப்ஸ்டைல், மளிகை பொருட்கள் பிரிவுகளில் சுமார் 11,784 ரீடைல் கிளைகளைக் கொண்டு இந்தியாவில் சுமார் 7000 நகரங்களில் விரிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Billionaire Mukesh Ambani's Reliance Retail dropped 2nd rank fastest growing retailer in the world

Mukesh Ambani latest update.. Billionaire Mukesh Ambani's Reliance Retail dropped 2nd rank fastest growing retailer in the world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X