முகேஷ் அம்பானியை முந்திய சீன தொழிலதிபர்.. யாரு சாமி நீ..! சொத்து மதிப்பு எவ்வளவு..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி பலரை பணக்காரர்களாகவும், சிலரை கோடீஸ்வரர்களாகவும் மாற்றியுள்ளது, ஆனால் ஒரு சிலரை மட்டுமே உச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

 

இப்படிப்பட்ட ஒருவர் தான் சாங்பெங் ஜாவோ.

இவர் யார் தெரியுமா... திடீரென டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலுக்குள் சாங்பெங் ஜாவோ நுழைய என்ன காரணம்..?!!!

கிரிப்டோகரன்சி-யில் தாறுமாறாக முதலீடு செய்யும் பாகிஸ்தான் மக்கள்..!

 மெக்டொனால்டு நிறுவனம்

மெக்டொனால்டு நிறுவனம்

வருமானத்திற்காக மெக்டொனால்டு நிறுவனத்தில் பர்கர் செய்து வந்த சாங்பெங் ஜாவோ, இன்று உலகின் டாப் 10 பணக்காரர்களுக்கு இணையாக உயர்ந்துள்ளார். சாங்பெங் ஜாவோ என்ற பெயர் பெரிய அளவில் பிரபலம் இல்லையென்றாலும், CZ என்ற பெயர் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

 பினான்ஸ் நிறுவனம்

பினான்ஸ் நிறுவனம்

கிரிப்டோகரன்சி-யில் முதலீடு செய்வதைத் தாண்டி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மற்றும் கிரிப்டோகரன்சி உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் ஒரு நிறுவனம் தான் பினான்ஸ். அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் பினான்ஸ் கிரிப்டோ எக்ஸ்சேஞ் சேவை இயங்கி வருகிறது.

 சாங்பெங் ஜாவோ பார்டி
 

சாங்பெங் ஜாவோ பார்டி

சமீபத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்குமுறை படுத்துவதற்காகத் திட்டமிட்டு வந்த நிலை பின்னான்ஸ் நிறுவனத்து சேவையை UAE-க்கு விரிவாக்கம் செய்வதற்காகச் சாங்பெங் ஜாவோ அந்நாட்டு அரசு அதிகாரிகளையும், இளவரசரையும் சந்தித்தார். இதன் பின்பு புர்ஜ் கலிஃபா அருகில் ஒரு அப்பார்ட்மென்ட்-ல் பிரம்மாண்ட பார்டி செய்தது உலகம் முழுவதும் வைரலானது.

ப்ளூம்பெர்க்

ப்ளூம்பெர்க்

இந்நிலையில் ப்ளூம்பெர்க் முதல் முறையாகச் சாங்பெங் ஜாவோ-வின் சொத்து மதிப்பை ஆய்வு செய்தது. அப்போது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்தது.

 96 பில்லியன் டாலர்

96 பில்லியன் டாலர்

ப்ளூம்பெர்க் ஆய்வின் படி 44 வயதாகும் சாங்பெங் ஜாவோ-வின் சொத்து மதிப்புத் தோராயமாக 96 பில்லியன் டாலர் எனக் கணித்துள்ளது. இது முகேஷ் அம்பானி-யின் மொத்த சொத்து மதிப்பை விடவும் அதிகமாகும், இதேபோல் பல முன்னணி பணக்காரர்களை ஓரம் கட்டியுள்ளார் சாங்பெங் ஜாவோ.

 பினான்ஸ் காயின்

பினான்ஸ் காயின்

அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சாங்பெங் ஜாவோ-விடம் இருக்கும் பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச், பினான்ஸ் சொத்துக்கள் பினான்ஸ் காயின் மட்டுமே கணக்கிட்டுள்ளது ப்ளூம்பெர்க். சாங்பெங் ஜாவோ-விடம் அறிவிக்கப்படாத பிட்காயின், எதிரியம் போன்ற பல கிரிப்டோ உள்ளது.

 1300 சதவீதம் வளர்ச்சி

1300 சதவீதம் வளர்ச்சி

சாங்பெங் ஜாவோ-விடம் தனது நிறுவனத்தின் பினான்ஸ் காயின் அதிகளவில் இருக்கும் வேளையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பினான்ஸ் காயின் விலை சுமார் 1300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பினான்ஸ் காயின் 2.62 சதவீதம் அதிகரித்து 450.80 டாலராக உள்ளது.

 பினான்ஸ் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்

பினான்ஸ் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்

பினான்ஸ் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமாக உள்ளது, சமீபத்தில் ஓரே நாளில் 170 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. கடந்த வருடம் மட்டும் சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது பினான்ஸ்.

 அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு

சாங்பெங் ஜாவோ-வின் பினான்ஸ் நிறுவனம் முதலில் சீனாவில் துவங்கப்பட்டாலும், பின்நாளில் சீனா அரசு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்த காரணத்தால் தனது தலைமையகத்தைக் கேமென் தீவுகளுக்கு மாற்றியது. இதேபோல் 2021ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு இந்நிறுவனம் பணச் சலவை செய்ததாக அறிவித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

சாங்பெங் ஜாவோ 2017ல் உருவாக்கப்பட்ட பினான்ஸ் நிறுவனம் மூலம் வெறும் 5 வருடத்தில் 96 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் நிறுவனர் செர்கி பிரின் ஆகியோரையும் தாண்டியிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Binance CEO Changpeng Zhao is richer than Indian billionaire Mukesh Ambani

Binance CEO Changpeng Zhao is richer than Indian billionaire Mukesh Ambani முகேஷ் அம்பானியை முந்திய சீன தொழிலதிபர்.. யாரு சாமி நீ..! சொத்து மதிப்பு எவ்வளவு..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X