கிரீன் கார்டு வழங்குவதில் முக்கிய கட்டுப்பாடு ரத்து.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற நாள் முதல் டிரம்ப் அரசு பல நாடுகள் மீது விதித்து வந்த கட்டுப்பாடுகளை அடுத்தது நீக்கி வருகிறார். சமீபத்தில் ஹெச்1பி விசா வழங்கும் முறையில் டிரம்ப் அரசு விதித்த பல கட்டுப்பாடுகளை ரத்து செய்து அமெரிக்காவை அனைவருக்குமான நாடாக மாற்றிய அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க அரசு தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் பட்டியலில் இருந்து சியோமி நிறுவனத்தை நீக்கி பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்தது.

சற்றே சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

இந்நிலையில் தற்போது கிரீன் கார்டு அளிப்பதில் இருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கக் கிரீன் கார்டு

அமெரிக்கக் கிரீன் கார்டு

அமெரிக்காவின் வெளிநாட்டினர் தங்களது வேலையை முதன்மையாக வைத்துக் குடியுரிமை பெறும் வசதிகள் உள்ளது. இதன் படி கிரீன் கார்டு பெறுவதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு அளிக்கப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு உள்ளது.

கிரீன் கார்டு கட்டுப்பாடுகள்

கிரீன் கார்டு கட்டுப்பாடுகள்

இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் கிரீன் கார்டு அளிக்க வேண்டும், அதற்காக நாடு வாரியாக இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளுக்கு மத்தியில் கருத்து இதில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

கிரீன் கார்டு கட்டுப்பாடுகள் ரத்து
 

கிரீன் கார்டு கட்டுப்பாடுகள் ரத்து

ஆனால் இந்த முறை ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி இரு தரப்பும் ஆலோசனை செய்து நாடு வாரியாகக் கிரீன் கார்டு அளிக்கும் விதிமுறையை ரத்துச் செய்ய bipartisan legislation அறிக்கை, அதாவது இரு தரப்பு ஒப்புக்கொண்டு ஒருமித்த கருத்தை முன்வைத்து மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மசோதா தாக்கல்

மசோதா தாக்கல்

இந்த அறிக்கையை Zoe Lofgren மற்றும் John Curtis ஆகிய இரு காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த மசோதாவை கொண்டு வந்து உள்ளனர். இது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களுக்கு ஜாக்பாட்

இந்தியர்களுக்கு ஜாக்பாட்

இப்புதிய சட்டத்தின் மூலம் அதிகளவில் நன்மை அடையபோவது இந்தியர்கள் தான், காரணம் அதிகளவிலான இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளனர்.

7 சதவீதம் மட்டுமே

7 சதவீதம் மட்டுமே

தற்போது இருக்கும் சட்ட திட்டத்தின் படி ஒரு நாட்டுக்கு அதிகப்படியாக 7 சதவீதம் கிரீன் கார்டு மட்டுமே வழங்கப்பட வேண்டும், இது ரத்து ஆகும் பட்சத்தில் வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் - NRI

அமெரிக்காவில் இந்தியர்கள் - NRI

இதுமட்டும் அல்லாமல் குடும்பங்கள் ஸ்பான்சர் செய்யும் விசா அளவீடு 15 சதவீதமாக உயர உள்ளது. இந்தப் பிரிவிலும் இந்தியர்கள் அதிகளவில் நன்மை அடைய வாய்ப்பு உள்ளது. சொல்லப்போனால் அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்தச் சில வருடத்தில் 30 முதல் 50 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bipartisan legislation Bill to remove per country cap on Green Card introduced in US Congress

Bipartisan legislation Bill to remove per-country cap on Green Card introduced in US Congress
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X