2022ல் பிட்காயின் மதிப்புக் கட்டாயம் 1 லட்சம் டாலரை நெருங்கும் என அனைத்து தரப்பினராலும் நம்பப்பட்ட நிலையில் ஒமிக்ரான் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உலக நாடுகளைத் தனது நாணய கொள்கையைக் கட்டாயம் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதற்கிடையில் பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய பாதிப்பும் ஏற்படும் என உலக வங்கி கணித்திருந்தது, இதன் வாயிலாக முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியது மட்டும் அல்லாமல் பிட்காயின் மதிப்பும் சரிய துவங்கியது.
2,396% வரை ஏற்றம் கண்ட 6 காயின்கள்.. பிட்காயின் விலை ஏற்றம்.. எதர் விலை வீழ்ச்சி..!

பிட்காயின் மதிப்பு
பிட்காயின் மதிப்பு 18ஆம் தேதி முதல் அதிகப்படியான சரிவையும் தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 9.5 சதவீதம் வரையில் சரிந்து 37,945.56 டாலர் வரையில் சரிந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

38,463.28 டாலர்
பட்காயின் மதிப்பு மாலை வர்த்தகத்தில் 9.27 சதவீதம் வரையில் சரிந்து 38,463.28 டாலருக்கு சரிந்துள்ளது. இன்றைய சரிவுக்கு ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சிக்கு எதிராக எடுத்த முடிவு தான் முக்கியக் காரணம்.

ரஷ்யா
ரஷ்ய மத்திய வங்கி வியாழக்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவின் நிதியியல் நிலைத்தன்மை, மக்களின் நலன் மற்றும் நாணய கொள்கையின் இறையாண்மை ஆகியவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் பொருளாதாரத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக ரஷ்ய நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கும் கொள்கையைத் தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் அனைத்து கிரிப்டோகரன்சிகளின் பயன்பாட்டையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது, என அந்நாட்டின் சிந்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் முன்னணி கிரிப்டோகரன்சிகளின் நிலவரம் இதுதான்.

கிரிப்டோகரன்சி விலை நிலவரம்
- பிட்காயின் 8.68% சரிந்து 38398.94 டாலராக உள்ளது.
- எதிரியம் 11.24% சரிந்து 2786.46 டாலராக உள்ளது.
- டெதர் 0.01% உயர்ந்து 1 டாலராக உள்ளது.
- பினான்ஸ் காயின் 9.99% சரிந்து 416.72 டாலராக உள்ளது.
- USD காயின் 0.04% உயர்ந்து 0.9999 டாலராக உள்ளது.
- கார்டானோ 11.09% சரிந்து 1.2 டாலராக உள்ளது.
- சோலானோ 14.26% சரிந்து 117.94 டாலராக உள்ளது.
- ரிப்பிள் 8.83% சரிந்து 0.6772 டாலராக உள்ளது.
- டெரா 9.98% சரிந்து 73.71 டாலராக உள்ளது.
- போல்காடாட் 11.08% சரிந்து 21.76 டாலராக உள்ளது.
- டோஜ்காயின் 8.11% சரிந்து 0.1511 டாலராக உள்ளது.
- அவலான்சி 14.26% சரிந்து 72.49 டாலராக உள்ளது.
- பினான்ஸ் USD 0.12% சரிந்து 0.9987 டாலராக உள்ளது.
- பாலிகான் 11.29% சரிந்து 1.84 டாலராக உள்ளது.
- ஷிபா இனு 10.16% சரிந்து 0.00002489 டாலராக உள்ளது.
- டெரா USD 0.35% சரிந்து 0.9978 டாலராக உள்ளது.