பிட்காயின் விலை 90% சரிவு.. ஆடிப்போன முதலீட்டாளர்கள்.. என்ன ஆச்சு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் முதல் பிட்காயின் ETF-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முதலீடு செய்யத் துவங்கிய வேளையில் இருந்து பிட்காயின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை அடைந்தது.

 

ஆனால் நேற்று அமெரிக்காவின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வரையில் 90 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான பதற்றம் ஏற்பட்டது.

பினான்ஸ் தளம்

பினான்ஸ் தளம்

அமெரிக்காவின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமாகப் பினான்ஸ் தளத்தில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தடாலடியாக 90 சதவீதம் வரையில் சரிந்தது. அதாவது 65000 டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் பிட்காயின் விலை தடாலடியாக 8,200 டாலருக்குக் குறைந்தது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இதனால் பினான்ஸ் தளத்தில் இருக்கும் லட்ச கணக்கான முதலீட்டாளர்கள் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்டு உள்ள சரிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேவேளையில் இந்தச் செய்தி காட்டுதீ போலப் பரவி உலகளவில் இருக்கும் கிரிப்டோ முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியது.

பிட்காயின் விலை
 

பிட்காயின் விலை

மேலும் பிட்காயின் விலை சரிந்த அடுத்த சில மணிநேரத்திலேயே பினான்ஸ் நிறுவனம் இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட விலை மாற்றம், விரைவில் சரி செய்யப்படும் என விளக்கம் அளித்தது. இதேபோன்று நிகழ்வு ஜப்பான் பங்குச்சந்தையில் ஏற்பட்டது யாராலும் மறக்க முடியாது.

வரலாற்று உச்ச விலை

வரலாற்று உச்ச விலை

பிட்காயின் விலை 67,000 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்த அடுத்த நாளில் இத்தகைய சம்பளம் நிகழ்ந்துள்ள காரணமாக அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பின்பு பிட்காயின் விலை தொடர்ந்து சரிவில் தான் உள்ளது.

கிரிப்டோகரன்சி விலை

கிரிப்டோகரன்சி விலை

தற்போது சர்வதேச கிரிப்டோ சந்தையில் பிட்காயின் - 63,559.54 டாலர் (2.22 சதவீத சரிவு), எதிரியம் - 4,132.43 டாலர் (2.13 சதவீத சரிவு), ரிப்பிள் - 1.10 டாலர் (2.31 சதவீத சரிவு), கார்டானோ - 2.19 டாலர் (2.41 சதவீத சரிவு), போல்காடாட் - 45.71 டாலர் (4.29 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.245 டாலர் (2.34 சதவீத சரிவு).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin price crashed 90% on Binance US crypto platform

Bitcoin price crashed 90% on Binance US crypto platform
Story first published: Friday, October 22, 2021, 19:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X