பல கோடி இளம் முதலீட்டாளர்களைக் குறுகிய காலகட்டத்திற்குள் பெரிய அளவில் ஈர்க்க கிரிப்டோகரன்சி கடந்த ஒரு வாரமாக அதிகளவில் சரிந்து வந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கணிசமாக உயர்ந்தது.
ஆனால் திங்கட்கிழமை மீண்டும் சரிய துவங்கியதால் சிறு மற்றும் நடுத்தர ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர்.
ஆனால் இன்றைய சரிவுக்கு மிகவும் முக்கியமான சில காரணங்களும் உண்டு.
அந்நிய செலாவணி இருப்பு சரிவு ஏன்.. இந்தியாவுக்கு இதனால் என்ன பிரச்சனை வரலாம்?

பாங்க் ஆஃ பிரான்ஸ்
பாங்க் ஆஃ பிரான்ஸ் கவர்னர் ஃபிரான்கோயிஸ் வில்லேராய் டி கல்ஹவ் திங்களன்று நடந்த மாநாட்டில், கிரிப்டோ சொத்துக்கள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டாலும், அதிகார வரம்புகள் முழுவதும் நிலையானதாக இல்லாவிட்டாலும், பொருத்தமான முறையில் இயங்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் சர்வதேச நிதி அமைப்பைச் சீர்குலைக்கும் என்று கூறினார்.

ஸ்டேபிள்காயின்
மேலும் அவர் ஸ்டேபிள்காயின்-க்கு தவறாகப் பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஃபேபியோ பனெட்டா திங்களன்று கூறுகையில் ஸ்டேபிள்காயின்-களை இயக்குவதிலும் பாதிப்பு உள்ளது எனக் கூறினார். இதன் மூலம் ஐரோப்பிய அதிகாரிகள் கிரிப்டோகரன்சிகளால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய மீண்டும் எச்சரித்துள்ளனர்.

பிட்காயின்
இதற்கிடையில் தான் அதிகரிக்கும் பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றின் எதிரொலியாகப் பிட்காயின் விலை இன்று காலை வர்த்தகத்தில் 5 சதவீதம் வரையில் சரிந்து 29700 டாலராகச் சரிந்தது.

டெரா காயின்
மேலும் அதிகம் நம்பப்பட்ட டெரா கடந்த ஒரு மாதத்தில் 5 இல் ஒரு பங்கு சந்தை முதலீட்டை இழந்துள்ளது, இதுவும் ஒரு ஸ்டேபிள்காயின் என்பது முக்கியமானது.
டெராUSD காயின் 30 நாளில் 87.25 சதவீதம் சரிந்துள்ளது,

இன்றைய நிலவரம்
பிட்காயின் - 29,964.85 டாலர்
எதிரியம் - 2,035.50 டாலர்
டெதர் - 0.9991 டாலர்
USD காயின் - 0.9999 டாலர்
பினான்ஸ் - 298.50 டாலர்
ரிப்பிள் - 0.4199 டாலர்
கார்டானோ - 0.5680 டாலர்
சோலானோ - 54.35 டாலர்
பினான்ஸ் USD - 1.00000 டாலர்
டோஜ் காயின் - 0.09 டாலர்
போல்காடாட் - 10.96 டாலர்
அவலான்சி - 32.96 டாலர்
வார்ப்டு பிட்காயின் - 29,950.63 டாலர்
ட்ரான் - 0.0689 டாலர்
ஷிபா இனு - 0.000012 டாலர்
டாய் - 1.00000 டாலர்
பாலிகான் - 0.68 டாலர்
க்ரானோஸ் - 0.19 டாலர்
UNUS - 4.99 டாலர்
லைட்காயின் - 67.17 டாலர்