அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில மணிநேரமே இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீட்டுச் சந்தையில் ரிஸ்க் எடுக்கத் துவங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்று தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் முதலீடு செய்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் கிட்டதட்ட உறுதியான காரணத்திற்காக முதலீட்டாளர்கள் தற்போது பங்குச்சந்தை மற்றும் நாணய சந்தை மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின் தடாலடியாக ஓரே நாளில் 7 சதவீதம் உயர்ந்து, ஒரு பிட்காயின் மதிப்பு 15,000 டாலராக உயர்ந்துள்ளது.
மீண்டும் ரெசிஷன்.. மோசமான நிலையில் பிரிட்டன் பொருளாதாரம்..!

அமெரிக்க முதலீட்டுச் சந்தை
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அமெரிக்கச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைக்கும் மிகவும் சாதகமாக உள்ள காரணத்தால் சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்துள்ளது.
ஆனாலும் அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் எந்தத் தேர்தலைக் கட்டிலும் 2020 தேர்தலின் போது சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

பிட்காயின்
இதன் வாயிலாகப் பிட்காயின் கடந்த 3 வருடத்தில் ஏற்படாத அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து 15,000 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2020 வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு சுமார் 40 சதவீதம் வளர்ச்சி அடைந்து கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களையும், கிரிப்டோகரன்சி உற்பத்தியாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

20,000 டாலர்
பல நாடுகளில் கிரிப்டோகரன்சி தடை விதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அடுத்தச் சில வாரங்களுக்கு இதேபோன்ற வளர்ச்சியைப் பதிவு செய்தால் பிட்காயின் டிசம்பர் 2017ல் அடைந்த 20,000 டாலர் என்ற உச்ச விலையை அடையும்.

தனியார் நிறுவனங்கள்
டாலர் மதிப்பு குறைந்து வரும் இந்தச் சூழ்நிலையில் பேபால் மற்றும் ஸ்கொயர் ஆகிய நிறுவனங்கள் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி மூலம் பேமெண்ட்-ஐ ஏற்று வரும் காரணத்தால் இதன் மதிப்பும் வர்த்தகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முக்கிய முதலீடு தளம்
சீனா பொருளாதாரத்தின் ஆதிக்கத்தாலும், பிரிட்டன் பொருளாதாரத்தின் வீழ்ச்சியாலும் டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் அதிகளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் முதலீட்டாளர்களுக்குத் தற்போது தங்கத்தைத் தாண்டி கிரிப்டோகரன்சி முக்கிய முதலீட்டுத் தளமாக உள்ளது.
தங்கம் விலை 2020ல் மட்டும் சுமார் 30 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 கணிப்பு
தற்போது நிலவும் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலையில் பிட்காயின் மதிப்பு 2021ல் வரலாறு காணாத புதிய உச்சத்தை அடையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் வல்லரசு நாடுகளின் முதலீட்டாளர்களுக்குப் புதிய முதலீட்டுத் தளம் வேண்டும் என்பதற்காகக் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதுள்ள தடையை நீக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

விலை நிலவரம்
இன்றைய வர்த்தகத்தில் முன்னணி கிரிப்டோகரன்சி விலை மற்றும் கடந்த 24 மணிநேரத்தில் வளர்ச்சி அளவீடுகள்
- Bitcoin - 15,698.64 டாலர் -9.97 சதவீத வளர்ச்சி
- Ethereum - 432.41 டாலர் - 7.31 சதவீத வளர்ச்சி
- Tether - 1.00 டாலர் - 0.10 சதவீத வளர்ச்சி
- XRP - 0.25 டாலர்- 5.33 சதவீத வளர்ச்சி
- Bitcoin Cash - 254.09 டாலர் - 3.74 சதவீத வளர்ச்சி
- Chainlink - 11.34 டாலர் - 7.49 சதவீத வளர்ச்சி
- Binance Coin - 28.58 டாலர் - 3.68 சதவீத வளர்ச்சி
- Litecoin - 61.42 டாலர் - 10.95 சதவீத வளர்ச்சி
- Polkadot - 4.40 டாலர் - 6.53 சதவீத வளர்ச்சி
- Cardano - 0.10 டாலர் - 7.18 சதவீத வளர்ச்சி