இந்தியா முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 5 மாநில தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிற மாநிலங்களைக் காட்டிலும் எப்படியாவது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கிய சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக மார்ச் 7ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இந்நிலையில் பிஜேபி மிகப்பெரிய தொகையை விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்துள்ளதாகப் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?

பேஸ்புக் டிஜிட்டல் விளம்பரம்
இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது மக்களை நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகப் பல வழிகளில் பல வகையில் விளம்பரம் செய்து வருகிறது. இதில் முக்கியமான ஒரு வழியாகப் பேஸ்புக் டிஜிட்டல் விளம்பரங்கள் விளங்குகிறது.

பாரதிய ஜனதா கட்சி
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலுக்காக இம்மாநிலத்தில் மட்டும் ஃபேஸ்புக் விளம்பரங்களுக்குப் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் விளம்பர நூலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 கோடி ரூபாய்
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரையிலான 30 நாட்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் பேஸ்புக் விளம்பரங்களுக்காக நிறுவனங்கள், மக்கள், அரசியல் கட்சி என அனைத்து தரப்பினரும் மொத்த 7.5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதில் 50 சதவீதத்தைப் பாரதிய ஜனதா கட்சி செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளுக்கு 10 லட்சம்
இதன் மூலம் பிஜேபி ஒரு நாளுக்குச் சராசரியாக 10 லட்சம் ரூபாய் வீதம் மொத்த 3.1 கோடி ரூபாயை கடந்த 30 நாட்களில் பேஸ்புக் விளம்பரத்திற்காகச் செலவு செய்து உள்ளது என Facebook Ad Library தரவுகள் கூறுகிறது.

காங்கிரஸ்
பிஜேபி-யை தொடர்ந்து ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரையிலான 30 நாட்களில் சமாஜ்வாதி கட்சி ஒரு நாளுக்கு 63,333 ரூபாய் வீதம் ஒரு மாதம் 19 லட்சம் ரூபாயும், ராஷ்ட்ரிய லோக் தாள் ஒரு நாளுக்கு 25,000 ரூபாய் வீதம் ஒரு மாதம் 7.5 லட்சம் ரூபாயும், காங்கிரஸ் கட்சி 21,000 ரூபாய் வீதம் ஒரு மாதம் 6.3 லட்சம் ரூபாயும் செலவு செலவு செய்துள்ளது.

15 கோடி வாக்காளர்கள்
பேஸ்புக்-ஐ தொடர்ந்து ஹிந்தி பப்ளிக்வைப் தளத்தில் இதே காலகட்டத்தில் சுமார் 79 லட்சம் ரூபாய் விளம்பரத்திற்காகச் செலவு செய்யப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 15 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதில் புதிதாக வாக்கு அளிப்போர் எண்ணிக்கை மட்டும் 52.8 லட்சம்.