எல்லாம் பொய்யா கோபால்.. Boycott Chinese Products வெறும் வார்த்தை தான்.. வழக்கம்போல சீனா தான் டாப்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவைப் புறக்கணிப்போம். Boycott Chinese Products, சீன பொருட்கள் வேண்டாம். சீனா வேண்டாம் என்ற கோஷம் எல்லாம் பொய்த்துப் போய்விட்டது.

 

சீனாவுடனான இந்திய வர்த்தகம் கடந்த 2021-ன் நிதியாண்டில், அமெரிக்காவுடனான வர்த்தகத்தை விட அதிகம் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஏனெனில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் அதிகம் வளர்ச்சிக் காட்டியுள்ள ஒரே நாடு சீனா தான்.

# சீன பொருட்கள் வேண்டாம்

# சீன பொருட்கள் வேண்டாம்

#Boycott Chinese Products, #Boycott China, #BoycottChineseProducts, சீனாவைப் புறக்கணிப்போம், சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம், சீனா வேண்டாம், சீன பொருட்கள் வேண்டாம். சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைப்போம் போன்ற பல ஹேஷ்டேக்குகள் பரவலாய் சமூக வலைதளங்களில் பரவியது. பல அமைப்பினரிடையே இந்த கோஷங்கள் எழுந்தன.

இந்தியாவின் வர்த்தக கூட்டாளி சீனாதான்

இந்தியாவின் வர்த்தக கூட்டாளி சீனாதான்

ஆனால் இந்த கோசங்கள் அனைத்தும் பொய்த்துப் போனதையே இந்தப் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. ஏனெனில் கடந்த நிதியாண்டில் இந்திய - சீன தரப்புக்கு இடையே வர்த்தகம் 86.4 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆக இதன் மூலம் வழக்கம்போல சீனாதான் இந்தியாவின் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.

இந்திய - சீன எல்லை பிரச்சனை
 

இந்திய - சீன எல்லை பிரச்சனை

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா சீனா இடையே பல பிரச்சனைகள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக சீனாவுடனான எல்லைப்பிரச்னைக்கு மத்தியில், இந்திய வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். இதற்கிடையில் தான் சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பல எதிர்ப்புகள் சீனாவுக்கு எதிராக கிளம்பின.

பொய்யாய் போன கோஷங்கள்

பொய்யாய் போன கோஷங்கள்

ஏன் அரசே அந்த சமயத்தில் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் இந்த எதிர்ப்புகள் எல்லாம் பொய்யானதை இந்த வர்த்தகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த 2021-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வர்த்தகம் 13% குறைந்து 684.77 டாலர்களாக குறைந்துள்ளது. எனினும் சீனாவுடனான வர்த்தகம் குறையவில்லை.

அமெரிக்காவுடனான வர்த்தகம் சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகம் சரிவு

இதே 2021ம் நிதியாண்டில் மாறாக அமெரிக்காவுடனான இந்திய இருதரப்பு வர்த்தகம் 9.5% குறைந்து 80.5 பில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவுடனான இருதரப்பு வர்த்தகம் 2021ம் நிதியாண்டில் 86.4 பில்லியன் டாலர்களாகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், சீனாவுடன் இருதரப்பு வர்த்தகம் 5.53% அதிகரித்துள்ளது. மற்ற முக்கிய நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகம் பெரிய அளவில் இந்தியாவுக்குக் குறைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் மோசமான சரிவு

வளைகுடா நாடுகளில் மோசமான சரிவு

அதே காலகட்டத்தில் UAE- யுடனான வர்த்தகம் 2021ம் நிதியாண்டில் 26.72% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இதே சவுதி அரேபியாவுடனான இந்திய வர்த்தகம் 33.39% குறைந்துள்ளது. ஈராக்குடனான வர்த்தகம் அதிகபட்சமாக 38.38% குறைந்துள்ளது. இப்படி வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

இந்தியாவின் மிகக்பெரிய இறக்குமதியாளர் சீனா தான்

இந்தியாவின் மிகக்பெரிய இறக்குமதியாளர் சீனா தான்

என்ன தான் இந்தியா சீனாவுக்கு இடையேயான உறவு பின் தங்கியிருந்தாலும், இன்றளவிலும் இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக சீனா தான் தற்போது வரையில் உள்ளது. கடந்த ஆண்டில் சீனா இந்தியாவில் இருந்து முந்தைய ஆண்டினை போலவே இறக்குமதி செய்துள்ளது. இது 0.07% மட்டுமே குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் இறக்குமதி

இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் இறக்குமதி

ஆனால் இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 19.38% சரிவு கண்டு 28.88 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இறக்குமதி 393.6 பில்லியன் டாலர்களாக சரிவு கண்டுள்ளது, அதாவது 17.08% குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதிலும் சவுதி அரேபியா, ஈராக், கொரியா, அமெரிக்கா, யுஏஇ, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு மிகக் குறைந்துள்ளது.

பற்பல அதிரடியான நடவடிக்கைகள்

பற்பல அதிரடியான நடவடிக்கைகள்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானதையடுத்து, சீனாவைப் புறக்கணிப்போம் என்ற பிரச்சாரம் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியது. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. எனினும் தற்போது வரையிலும் கூட இறக்குமதிக்காக சீனாவையே இந்தியா அதிகம் நம்பியிருக்கிறது. குறிப்பாக மின்னணு பொருட்கள், மருந்து மூலதன பொருட்கள், பிளாஸ்டிக், ரசாயனம் போன்ற துறைகளில் சீனாவையே இந்தியா அதிகம் நம்பியுள்ளது.

ஏற்றுமதியிலும் சரிவு

ஏற்றுமதியிலும் சரிவு

இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு சீனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், இறக்குமதி செய்ய வேண்டாம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தும் பயனில்லை, சீனாதான் இன்று வரையிலும் இந்தியாவின் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்து வருகிறது. அதே போல் சீனாவுக்கு ஏற்றுமதியும் 27% அதிகரித்து 21.18 பில்லியன் டாலர்களாக உள்ளது. பங்களாதேஷுக்கு 11% அதிகரித்துள்ளது. எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு இது வெகுவாக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

# Boycott Chinese Products! Mainland China overtakes US to become india’s largest trade partner in last financial year

India – china latest updates.. # Boycott Chinese Products! Mainland China overtakes US to become india’s largest trade partner in last financial year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X