இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பிபிசிஎல், தனக்கு சொந்தமான Numaligarh refinery நிறுவனத்தின் 61.65% பங்குகளை விற்க இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பங்கு விற்பனை மூலம் 61.65% பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மதிப்பு 9,876 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பங்கினை consortium of OIL மற்றும் Engineers India Ltd நிறுவனங்கள் 49 சதவீத பங்கினையும், 13.65 சதவீத பங்குகளை அஸ்ஸாம் அரசும் வாங்கலாம் என முன்னதாக கூறப்பட்டது.

யார் யார் ஒப்புதல்
அசாம் அரசு இந்த நிறுவனத்தினை பொதுத்துறை நிறுவனமாக வைக்க முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் பிபிசிஎல் இதன் ஒரு பகுதியாக தனது 61.65 சதவீத பங்குகளை, இரு பொதுத்துறை நிறுவனங்களிடமே விற்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் தான் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மற்றும் அசாம் அரசு, ஆகிய மூன்றின் கூட்டணி இந்த பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பிபிசில் இயக்குனர் குழு ஒப்புதல்
இதற்காக மார்ச் 1ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பிபிசிஎல் இயக்குனர்கள் குழு, இந்த பங்கு விற்பனை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பிபிசிஎல் தன்னிடம் உள்ள 445.35 கோடி பங்குகளை, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மற்றும் அசாம் அரசு கூட்டணிக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு திறன்
நுமலிகர் சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்கிறது. தற்போது ஆயில் இந்தியா 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதே அசாம் அரசு 12.35 பங்குகளையும் வைத்துள்ளது. என்ஆர்எல் பங்கு விற்பனைக்கு பிறகு, பிபிசிஎல் மும்பை, கொச்சி மற்றும் மத்திய பிரதேச நிலையங்களுடன் இருக்கும். பிபிசில் நிறுவனத்தில் அரசு 52.98 சதவீத பங்கினை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கினை வாங்க விருப்பம்
வேதாந்தா குழுமம் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்களான அப்பல்லோ குளோபல் மற்றும் ஐ ஸ்கோயர் கேப்பிட்டலின் இந்திய அலகு திங்க் கேஸ் ஆகியவை வாங்குவதற்கான ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளன. என் ஆர் எல் பங்கு விற்பனையானது பிபிசிஎல்லில் முதலீடு செய்வதற்கான முதல் படியாகும். இதற்கிடையில் பிபிசிஎல்லின் பங்கு விற்பனையானது 2021 - 22ம் நிதியாண்டில் முடிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. நுமலிகர் நிறுவனத்தின் பங்கு விற்பனையானது தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.