12,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரிட்டிஷ் ஏர்வேர்ஸ் இரக்கமற்ற முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொரோனா பாதிப்பால் மொத்த வர்த்தகமும் முடங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு முடிந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 18 முதல் 24 மாதங்கள் ஆகும் என ஆய்வுகள் கூறும் நிலையில் தனது செலவுகளைக் குறைக்கச் சுமார் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

 

பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது IAG எனப்படும் மாபெரும் விமானச் சேவை நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

வளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..!!

IAG நஷ்டம்

IAG நஷ்டம்

International Consolidated Airlines Group என்பதன் சுருக்கம் தான் IAG, இந்நிறுவனம் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் மட்டும் அல்லாமல் Iberia (ஸ்பெயின் ஏர்லையன்ஸ்), Aer Lingus (அயர்லாந்து நாட்டு விமான நிறுவனம்) மற்றும் Vueling (மலிவு விலை விமானச் சேவை அளிக்கும் ஸ்பெயின் நாட்டு நிறுவனம்) ஆகிய 4 நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

IAG நிறுவனம் 2020 முதல் காலாண்டில் 535 மில்லியன் யூரோ நஷ்டம் (operating losses) அடைந்துள்ளது, கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனம் 135 மில்லியன் யூரோ அளவிலான லாபத்தை அடைந்திருந்தது.

இக்காலாண்டில் IAG நிறுவனத்தின் வருவாய் 13 சதவீதம் வரையில் சரிந்து மொத்த வருவாய் 4.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விடவும், 2வது காலாண்டில் பணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் 2வது காலாண்டில் வருவாய் மற்றும் லாபத்தின் அளவு இன்னும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்த IAG நிறுவனம், காலாண்டு அறிக்கையில் லாபத்தை அதிகரிக்கச் செலவுகளைக் குறைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்
 

பிரிட்டிஷ் ஏர்வேஸ்

இந்நிறுவனத்தில் 16,500 கேபின் க்ரூ, 3900 பைலட்கள் உட்படச் சுமார் 45,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் தனது ஊழியர்கள் அமைப்புக்கு மறுசீரமைப்பு திட்டங்களையும், பணிநீக்கம் குறித்த முடிவுகளைத் தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.

பணிகள்

பணிகள்

கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பணிகள் எண்ணிக்கை பாதிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பப் பல வருடங்கள் ஆகும் என IAG நிறுவனம் மட்டும் அல்லாமல் Lufthansa போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் அடுத்தச் சில வருடத்திற்கு விமானச் சேவை நிறுவனங்கள், அதனைச் சார்ந்துள்ள நிறுவனங்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

British Airways set to slash as many as 12,000 jobs over coronavirus

British Airways plans to cut as many as 12,000 jobs in response to the coronavirus crisis that means that passenger numbers will take years to recover, its owner International Consolidated Airlines Group. IAG, which also owns Iberia, Aer Lingus and Vueling, reported first-quarter operating losses before exceptional items of 535 million euros.
Story first published: Wednesday, April 29, 2020, 8:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X