100 வருட பழமையான சாக்லேட் நிறுவனம் முடங்கியது.. 'இது'தான் காரணமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பல முன்னணி மற்றும் பழமையான நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டன் நாட்டின் மிகவும் பழமையான ரீடைல் நிறுவனமான Debenhams மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரிட்டன் பழமையான நிறுவனம் தனது வர்த்தகத்தை முழுமையாக முடங்கியுள்ளது.

 

110 ஆண்டுப் பழமையான பிரிட்டிஷ் சாக்லேட் மற்றும் ரீடைல் நிறுவனமான Thorntons கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாகத் தனது வர்த்தகத்தை இழந்துள்ளதாகவும், நிறுவனத்தை மூட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Thorntons நிறுவனம் முடங்கியது

Thorntons நிறுவனம் முடங்கியது

Thorntons வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்புகள் காரணமாகத் தனது வர்த்தகம் பெரிய அளவில் முடங்கிய காரணத்தால், பிரிட்டன் நாட்டில் பல பகுதிகளில் இருக்கும் சுமார் 61 கடைகளை முழுமையாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

603 ஊழியர்கள் வேலை இழப்பு

603 ஊழியர்கள் வேலை இழப்பு

இதனால் Thorntons நிறுவனம் மற்றும் ரீடைல் கடைகளில் பணியாற்றும் சுமார் 603 ஊழியர்களின் வேலையை விட்டு விலக்கப்பட உள்ளனர். இதேபோல் Debenhams மூடப்படும் போது சுமார் 25,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்றால் மிகையில்லை.

பழமையான நிறுவனங்கள் பாதிப்பு
 

பழமையான நிறுவனங்கள் பாதிப்பு

பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றுக் கட்டுப்படுத்த பலகட்டங்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் உலகில் பிறநாடுகளை விடவும் பிரிட்டன் நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.

இதன் மூலம் பழமையான நிறுவனங்கள் அனைத்தும் வர்த்தகம் இல்லாமல் தொடர்ந்து சரிவை எதிர்கொண்ட காரணத்தால் நிறுவனம் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

லாக்டவுன் கட்டுப்பாடுகள் பிரிட்டன் நாட்டின் ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகங்கள் மத்தியில் அதிகப்படியான போட்டி மற்றும் நெருக்கடி கொரோனாவுக்கு முன்பே இருந்தது. இந்த லாக்டவுன் காலகத்தில் இது மிகவும் மோசம் அடைந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகப் போட்டி

ஆன்லைன் வர்த்தகப் போட்டி

ஆன்லைன் போட்டி மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத பல ரீடைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலை பிரிட்டன் மட்டும் அல்லாமல் உலகில் அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Thorntons வீழ்ச்சி

Thorntons வீழ்ச்சி

இந்நிலையில் Thorntons வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில், 2015ல் இத்தாலிய நிறுவனமான Ferrero சுமார் 156 மில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கைப்பற்றியது, 2019ல் இந்நிறுவனம் ஆன்லைன் விற்பனைக்கு இறங்கியது. விற்பனையில் சுமார் 71 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் Thorntons ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ரீடைல் வர்த்தக இழப்பைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

British chocolatier Thorntons to close UK stores, 600 jobs at risk

British chocolatier Thorntons to close UK stores, 600 jobs at risk
Story first published: Tuesday, March 16, 2021, 19:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X