ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்-ன் சூப்பர் ஆஃபர்.. எல்லோருக்கும் ஃப்ரி சிம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையிலும், வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காகப் பிஎஸ்என்எல் அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

 

இந்நிலையில் இந்தியா முழுவதையும் இணைக்கும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டுச் சிம்-களை இலவசமாகக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இன்றளவும் இந்தியாவின் சிறு குறு கிராமங்களை இணைப்பதில் பிஎஸ்என்எல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அந்த வகையில் நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக ஃப்ரி சிம் ஆஃபரை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் வேளையில், பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதோடு தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல திட்டங்களை அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல்.

20 ரூபாய் கட்டணம்

20 ரூபாய் கட்டணம்

இந்தியாவில் இயங்கி வரும் பிற தனியார் மற்றும் பொதுத்துறை டெலிகாம் நிறுவனங்களைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் சிம் வாங்க வேண்டும் என்றால் 20 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் தற்போது பிஎஸ்என்எல் சிறப்புத் திட்டமாகப் புதிய வாடிக்கையாளர்களுக்குச் சில முக்கிய விதிமுறையோடு ஃப்ரி சிம் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

குறைந்தபட்சம் 100 ரூபாய்
 

குறைந்தபட்சம் 100 ரூபாய்

பிஎஸ்என்எல்-ன் சிறப்புத் திட்டத்தின் ஃப்ரி சிம் வாங்குவோர் முதல் முறை ரீசார்ஜ் செய்யும் போது குறைந்தபட்சம் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை முக்கிய நிபந்தனையாக வைத்துள்ளது.

இதனால் பிஎஸ்என்எல்-ன் சிறப்புத் திட்டத்தின் கீழ் 100 ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஃப்ரி சிம் பெற முடியும்.

குறுகிய காலச் சலுகை

குறுகிய காலச் சலுகை

மேலும் இந்த ப்ரீ சிம் குறைந்த காலகட்டத்திற்கு மட்டுமே பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதனால் பிஎஸ்என்எல் வாங்க விரும்புவோர் நவம்பர் 28ஆம் தேதிக்குள் வாங்க வேண்டியது அவசியம்.

நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின் மீண்டும் 20 ரூபாய் கட்டணம் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி ஃப்ரி சிம் வாங்குவது

எப்படி ஃப்ரி சிம் வாங்குவது

இந்த ஃப்ரீ சிம் வாங்க அருகில் உள்ள பிஎஸ்என்எல் ரீடைல் கிளைகளுக்குத் தகுந்த அடையாள சான்றிதழ் உடன் சென்றால் அடுத்த 10 முதல் 15 நிமிடத்தில் இப்புதிய சிறப்புத் திட்டத்தின் கீழ் ஃப்ரீ சிம் கிடைக்கும்.

பிராண்ட்பேன்ட் சேவை

பிராண்ட்பேன்ட் சேவை

மேலும் பிஎஸ்என்எல் புதிதாக 599 ரூபாய் விலையில் பிராண்ட்பேன்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதோடு பைபர் பேசிக் பிளஶ் திட்டத்தின் கீழ் 60MBPS வேகத்தில் 3300ஜிபி டேட்டா மற்றும் 24 மணிநேர அன்லிமிடெட் காலிங் வசதியைக் கொடுக்கிறது பிஎஸ்என்எல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL free SIM card offer for people until November 28

BSNL free SIM card offer for people until November 28
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X