அது தெரிஞ்ச விஷயம் தான்.. உண்மையை போட்டுடைத்த நோபல் வின்னர்.. கவலையில் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் வம்சாவாளியைச் சேர்ந்த் அபிஜித் பானர்ஜி அவ்வப்போது இந்திய பொருளாதாரம் பற்றிய தனது கருத்துகளை கூறி வருவது தெரிந்த ஒரு விஷயமே.

 

பொருளாதாரம் பற்றி நோபல் பரிசினை பெற்ற பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.

வறுமை ஒழிப்பு தளத்தில் தொடர்ந்து பணியாற்றிய அபிஜித் பேனர்ஜியும், எஸ்தர் டஃபலோவும் ஏழை பொருளாதாரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளனர்.

மீண்டும் எச்சரிக்கை

மீண்டும் எச்சரிக்கை

ரகுராம் ராஜன், கீதா கோபிநாத், மிஹிர் எஸ் சர்மா ஆகியோருடன் இணைந்து "பொருளாதாரத்திற்கான இப்போதைய தேவை என்ன? எனும் சிறப்பு கட்டுரையை தொகுத்தவர். இந்திய நிலையில் இந்தியாவில் நிலவி வரும் மந்தநிலை குறித்து அடிக்கடி தனது கருத்துகளையும் போட்டுடைப்பவர். தற்போது இந்தியாவில் நிதபற்றாக்குறையானது எல்லையை மீறி விட்டது என்று எச்சரித்துள்ளார்.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

நாட்டின் நிதிப்பற்றாக்குறையானது ஏற்கனவே எல்லை மீறிவிட்டது. ஆக மேலும் அதனை நெருக்க நினைக்க வேண்டாம். வரவிருக்கும் பட்ஜெட்டுக் நிதி இறுக்க நடவடிக்கைகளை இணைக்க நான் பரிந்துரைக்க மாட்டேன். தொடர்ச்சியான மந்த நிலைக்கு மத்தியில் பிப்ரவரியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய வித்தியாசம்
 

பெரிய வித்தியாசம்

நாட்டில் நிதிப்பற்றாக்குறை ஏற்கனவே பெரிய அளவில் எல்லை மீறியுள்ளது. இது மேலும் இது பெரிய விஷயம். ஆக நான் தற்போது நிதி இறுக்கத்தை பற்றி நினைக்கவில்லை என்றும் மும்பையில் நடந்த நிகழ்வில் பானர்ஜி தெரிவித்துள்ளார். அரசு கடந்த 2019 - 20ம் ஆண்டில் நிதிபற்றாக்குறையானது 3.3%மாகவும் இலக்கு வைக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டில் 3.4% இருந்தது கவனிக்கதக்கது.

வருவாய் வீழ்ச்சி

வருவாய் வீழ்ச்சி

நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் மற்றும் ஒட்டுமொத்த வருவாய் குறைந்து வருவதால் இந்த இலக்கினை அடைவது மிகக்கடினம். கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி குறைப்பினால் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் வீழ்ச்சியடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கை தளர்த்த வேண்டும்

இலக்கை தளர்த்த வேண்டும்

நாட்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கு நாட்டில் 4% தளர்த்துமாறு சில மாநிலங்கள் மத்திய அரசிடம் கேட்டுள்ளன. மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெருநிறுவன வரி விகித வெட்டுக்கள் ஆகியவற்றின் விளைவாக பலவீனமான வருவாய் வசூல் காரணமாக இப்படி கூறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 - 3.85% உயரும் என்றும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆர்பிஐயிடம் எதிர்பார்ப்பு

ஆர்பிஐயிடம் எதிர்பார்ப்பு

ஏற்கனவே நிலவி வரும் மந்த நிலையால் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், 2019 - 20 நிதியாண்டில், கடந்த ஆகஸ்ட் 2019-ல் தான் 1.76 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டது ஆர்பிஐ. இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயில் 1.23 லட்சம் கோடி ரூபாய் ஈவுத் தொகை (Dividend) + 52,637 கோடி ரூபாய் உபரி முதல் எனப் பிரித்துக் கொடுத்தார்கள். இந்த நிலையில் மீண்டும் ஆர்பிஐ கையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கல்விக்கு நிதி

கல்விக்கு நிதி

மத்திய அரசு ஏற்கனவே கல்விக்கு குறைவான நிதி தான் ஒதுக்கி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் 3,000 கோடி ரூபாயாக குறைக்கும் திட்டம் பற்றி பேசிய பானர்ஜி, கல்வி என்பது ஒரு மாநிலத்தின் பொருள். இதில் குறைப்பது கடலில் ஒரு துளி போல என்றும் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: Abhijit Banerjee said already fiscal deficit breached of aims

Abhijit Banerjee said already fiscal deficit breached of aims. And he said would not suggest incorporating fiscal tightening measures in the upcoming union budget 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X