பட்ஜெட்டிலாவது நல்ல வழி பிறக்குமா.. மீண்டு வருமா வாகனத்துறை.. கதறும் உற்பத்தியாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த பல மாதங்களாக படு பாதளத்தில் உள்ள ஆட்டோமொபைல் துறையில், இது வரை மீண்டு எழுவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

இப்படி ஒரு நிலையில், வாகனத்துறையும் கடந்த ஆண்டு முதல் கொண்டே பல வேண்டுகோள்களை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால் இதுவரையில் அந்த கோரிக்கைகள் நிறைவேறியதாக தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் அடுத்து மாதம் வரவிருக்கும் பட்ஜெட்டிலாவது, வாகன துறைக்கு போதிய நடவடிக்கை வேண்டும் என்றும் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

பல கோரிக்கை
 

பல கோரிக்கை

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி, எலட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலான லித்தியம் பேட்டரி மீதான் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று உள்ளிட்ட பல கோரிக்கைகளை வாகனத்துறை மத்திய அரசிடம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28% உள்ள நிலையில், இதை 18% மாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

பதிவு தொகையினை குறைக்க வேண்டும்

பதிவு தொகையினை குறைக்க வேண்டும்

கடந்த ஆண்டில் இருந்தே வாகனத் துறையானது படு வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் நிலவி வரும் மோசமான நிலையில், வாகன பதிவுக்கான தொகையையும் அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பழைய வாகனகளின் விற்பனையும் பாதிக்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பதிவுத் தொகையை குறைக்க வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விற்பனை அதிகரிக்கலாம்

விற்பனை அதிகரிக்கலாம்

பிஎஸ் -6 விதிகளினால் உமிழ்வு சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முயற்சியால் 8 - 10% வாகன விற்பனை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். இது அராசாங்கத்திற்கான ஜிஎஸ்டி வசூலை மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரியை குறைக்க வேண்டும்
 

வரியை குறைக்க வேண்டும்

ஜிஎஸ்டி வரி குறைப்புக்கான முடிவெடுக்கும் சக்தியானது ஜிஎஸ்டி கவுன்சிலிடம் உள்ளது. இது பட்ஜெட்டுடன் நேரிடையாக தொடர்புடையது அல்ல. எனினும் இது ஆட்டோமொபைல் துறை புத்துயிர் பெறுவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். லித்தியம் அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி தயாரிப்பை அதிகரிக்க வேண்டும். இது மின்சார வாகனங்களின் விலையைகுறைக்க வழிவகுக்கும்.

விலையை குறைக்க வழி வகுக்கும்

விலையை குறைக்க வழி வகுக்கும்

இந்த நடவடிக்கையானது வாகனங்களின் விலையை குறைக்க வழி வகுக்கும். மேலும் நாட்டில் பசுமை இயக்கம் தத்தெடுப்பதை துரிதப்படுத்தவும் உதவும் என்றும் மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: Automobile industry expect bold fiscal measures to revive growth

Automobile industry expects bold fiscal measures to revive growth. Auto industry expects GST reduction, abolition of duty on import of lithium-ion battery cells, its may encourage electric mobility.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X